“கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு போட்டதால் வேலை இல்லாமல் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் திண்டாடிக் கொண்டிருந்தோம். இதைத் தாயுள்ளத்தோடு உணர்ந்த எங்கள் முதலாளி 25 கிலோ அரிசியோடு மளிகைச் செலவு என ஒருவருக்கு 1,500 மதிப்புள்ள பொருள்களை 60 குடும்பங்களுக்கு மேல் கொடுத்திருக்கிறார். எங்கள் முதலாளியைப் பார்த்து இளம்பிள்ளையில் உள்ள மற்ற முதலாளிகளும் தொழிலாளிகளுக்கு உதவி செய்கிறார்கள். எங்கள் முதலாளி எப்போதும் முன் உதாரணமான முதலாளி” என்று நெகிழ்கிறார்கள் தொழிலாளிகள்.

அரசி மூட்டைகள்.

மத்திய, மாநில அரசு கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதையடுத்து கூலித் தொழிலாளிகள் வேலை இழந்து வருமானம் இல்லாமல் தவித்து வருகிறார்கள். சேலம் மாவட்டம் இளம்பிள்ளையைச் சேர்ந்த ரீனா டெக்ஸ் உரிமையாளர் தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளிகளுக்கு அரிசி, மளிகைப் பொருள்கள் என 60 குடும்பங்களுக்கு 80,000 ரூபாய் மதிப்பிலான உதவிகளை வழங்கினார். இது சேலம் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதுபற்றி ரீனா டெக்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளி கிருஷ்ணன், “நான் 15 வருடமாக ரீனா டெக்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். எங்கள் முதலாளி ரொம்ப தங்கமான குணமுடையவர். எங்களிடம் கடிந்து பேசியதில்லை. நாங்கள் ஏதாவது தப்பு செய்திருந்தால்கூட அன்பாகப் பேசி மீண்டும் அந்தத் தப்பை செய்யாத அளவுக்கு வழி நடத்துவார்.

கிருஷ்ணன்

எங்கள் நிறுவனத்தில் முதலாளி தொழிலாளி என்ற பாகுபாடு இல்லாமல் அவரவர் பணிகள் சரியாகவும் விரைவாகவும் செய்வோம். எங்களுக்கு ஏதாவது கஷ்டம் ஏற்பட்டால் முன்பணம் கொடுத்து உதவி செய்வார். வருடம்தோறும் குழந்தைகளின் படிப்பு செலவுக்கும், பண்டிகை காலங்களில் இனிப்பும், புத்தாடைகளும் கொடுத்து மகிழ்ச்சி அடையச் செய்வார். இப்படித் தொழிலாளிகளின் நலனில் அக்கறை உடையவர்.

தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு போட்டதால் வேலை இல்லாமல் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் திண்டாடிக் கொண்டிருந்தோம். இதைத் தாயுள்ளதோடு உணர்ந்த எங்க முதலாளி 25 கிலோ அரிசியோடு மளிகைச் செலவு என ஒருவருக்கு 1,500 ரூபாய் மதிப்புள்ள பொருள்களை 60 குடும்பங்களுக்கு மேல் கொடுத்திருக்கிறார். எங்கள் முதலாளியைப் பார்த்து இளம்பிள்ளையில் உள்ள மற்ற முதலாளிகளும் தொழிலாளிகளுக்கு உதவி செய்கிறார்கள். எங்கள் முதலாளி எப்போதும் முன் உதாரணமான முதலாளி” என்றார்.

இதுபற்றி ரீனா டெக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வடிவேல், “நானும் ஒரு தொழிலாளியாக இருந்து கடினமாக உழைத்து இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். தொழிலாளிகளின் உழைப்பை நம்பி முதலாளிகள் இருக்கிறோம். தொழிலாளிகளுக்கு ஒரு கஷ்டம் என்றால் முதலாளிகள் உதவ வேண்டும். கொரோனா தொற்று காரணமாக அனைவரும் வேலையில்லாமல் பாதிக்கப்பட்டிருக்கிறோம்.

வடிவேல்

முதலாளிகளுக்கே பாதிப்பு என்கிறபோது தொழிலாளிகளின் நிலை இன்னும் மோசமானது. பணமாகக் கொடுத்தால் செலவு செய்து விடுவார்கள். பாவம் விழிப்புணர்வு இல்லாமல் கடைக்கும் சந்தைக்கும் போய் அலைவார்கள். அதனால் அவர்களுக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்துவிடும். என்பதால் அதைத் தவிர்க்கவே பொருளாக வாங்கிக் கொடுத்தேன்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.