கொரோனா வைரஸ் அச்சத்தால் இத்தாலி மக்கள் சாலைகளில் பணத்தை வீசியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.

உலகையே கொரோனா வைரஸ் மிரட்டிக் கொண்டிருக்கிறது. வளர்ந்த நாடுகளே கொரோனாவை எதிர்க்க முடியாமல் தவித்துப்போய் நிற்கின்றன. இதில் கொரோனா கொடூரமாக உயிர்களை பலிவாங்கிய நாடாக இத்தாலி இருக்கிறது. இதுவரை அங்கு 12,428 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள். மேலும் 1,05,792 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15,729 பேர் சிகிச்சை பலன்பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

image

இந்நிலையில், இத்தாலி குறித்த செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது. இத்தாலியில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் பணத்தை அவர்களது உறவினர்கள் சாலைகளில் வீசிச்சென்றதாக சில புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. அதனை பலரும் அதே தகவலுடன் பகிர்ந்து வைரலாக்கியுள்ளனர்.

image

ஆனால் இந்த தகவல் முற்றிலும் பொய் ஆகும். இத்தாலி மக்கள் யாரும் இவ்வாறு பணத்தை சாலையில் வீசிச் செல்லவில்லை. அந்தப் புகைப்படங்கள் அனைத்தும் கடந்த வருடம் மார்ச் மாதம் வெனிசுலாவின் மெரிடா நகரத்தில் எடுக்கப்பட்டவை ஆகும். அப்பகுதியில் உள்ள வங்கி ஒன்றை கொள்ளையடித்த கொள்ளையர்கள், பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட செல்லாத நோட்டுக்களை சாலைகளில் வீசிச்சென்றனர். அந்தப் புகைப்படங்களே தற்போது பகிரப்படுகின்றன என்பதே உண்மையாகும். மேலும் அந்த பணங்கள் அப்போதே எரிக்கப்பட்டும் விட்டன.

கொரோனா: டெல்லியில் இருந்து திரும்பிய 88 பேர் மருத்துவமனையில் அனுமதி

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.