உலகையே கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில், சீனாவில் புதிதாக யாரும் நேற்று கொரோனாவுக்கு பாதிக்கப்படவில்லை. மேலும் உயிரிழப்பும் ஏற்படவில்லை.
சீனாவின் வுகான் மாகாணத்தில் பரவிய கொரோனா உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42,114ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கொரோனாவால் 8,57,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 1,77,141 பேர் குணமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் ஒரே நாளில் புதிதாக 23,941 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 1,87,729ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 726 பேர் உயிரிழந்ததால் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 3,867 ஆக அதிகரித்துள்ளது. பிரான்சில் ஒரே நாளில் 499 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 3,5223 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் ஒரேநாளில் 748 பேர் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 8,464ஆக அதிகரித்துள்ளது.
இத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 837 பேர் உயிரிழந்ததால் அங்கு உயிரிழப்பு 12,428 ஆக அதிகரித்துள்ளது. 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட ஈரானில் கொரோனா காரணமாக 2,898 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், சீனாவில் நேற்று கொரோனாவுக்கு புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது . அத்துடன் அங்கு நேற்று ஒருவ்ர் கூட கொரோனாவுக்கு உயிரிழக்கவில்லை. சீனாவில் கொரோனா காரணமாக 3,305 பேர் உயிரிழந்த நிலையில் 76 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.