மதுரையில் இறந்த பாட்டியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாமல் சென்னையில் சிக்கிய பேரன் வேதனை அடைந்தார்.

மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த 103 வயதான மூதாட்டி சிவனம்மாள். இவர் மதுரை, விளாங்குடியிலுள்ள தனது மகனின் வீட்டில் வசித்து வந்தார். இந்த மூதாட்டியின் மற்றொரு மகன் இறந்துவிட, அந்த மகன் வயித்து பேரனை சிவனம்மாளே வளர்த்து வந்திருக்கிறார். அந்தப் பேரன் கார்த்திக் தற்போது சென்னையில் உதவி இயக்குநராக பணியாற்றி வரும் நிலையில், சிவனம்மாள் திடீரென உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

image

ஆனால், கொரோனாவால் போடப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக சென்னையில் முடங்கியுள்ள பேரன் கார்த்திக் தனது பாட்டியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியவில்லை. இதனால் காணொளி மூலமாக தனது பாட்டிக்கு இறுதிச் சடங்குகளை அவர் செய்தார். மதுரையிலும் ஊரடங்கு பின்பற்றப்படுவதால் இறந்தவருக்கு மாலை வாங்குவதற்கு அலைந்து திரிந்து ஏற்பாடு செய்துள்ளனர்.

image

 90 வயதை கடக்கும் போது மரணித்தால் கல்யாண சாவு என்கிற அடிப்படையில் மிக ஆடம்பரமாக இறுதிச்சடங்குகள் நடத்தப்படுவது மதுரையில் வழக்கம். ஆனால் உறவினர்கள் கூட இல்லாமல் குடும்பத்தார் மட்டுமே பங்கேற்று 3 மணி நேரத்தில் மூதாட்டியின் சடலத்தை எரியூட்ட இறுதி பயணத்தை நிறைவு செய்தனர். இது மாதிரியான ஒரு அனுபவத்தை மறக்க முடியாது என்றும், அதேநேரத்தில் அரசின் உத்தரவை நலன்கருதி ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் மூதாட்டியின் குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக பேரன் கார்த்திக்கும் உருக்கமாக பேசி வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், பாட்டியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாமல் போனதால் தனக்குள்ள துயரத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். 

கொரோனா: டெல்லியில் இருந்து திரும்பிய 88 பேர் மருத்துவமனையில் அனுமதி

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.