தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்த அரசு மருத்துவர் ஒருவர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்
தற்போது பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெல்லி நிஜாமுதீனில் மார்ச் முதல் வாரம் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்றவர்கள் பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதனை அடுத்து மாநாட்டுக்குச் சென்றவர்களை அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. மாநாட்டுக்கு சென்றவர்கள் தாமாகவே முன்வந்து பரிசோதனை செய்துகொள்ள வேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்த அரசு மருத்துவர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள காயல்பட்டினத்தைச் சேர்ந்த அரசு மருத்துவமனை மருத்துவரும், தொழிலதிபர் ஒருவரும் டெல்லியில் நடந்த மாநாட்டிற்கு சென்று வந்துள்ளனர். இதனையடுத்து இருவரையும் கொரோனா பரிசோதனைக்காக மாவட்ட நிர்வாகத்தினர் அழைத்துச் சென்றனர். அதேபோல் மாநாட்டிற்கு சென்று திரும்பாத 6 பேர் டெல்லியில் அரசின் கண்காணிப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்றிலிருந்து தப்பிய நாடுகள் எவை ?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM