கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் இத்தாலியும், பிரான்ஸூம் திணறி வரும் நிலையில், அந்நாட்டைச் சேர்ந்த நோயாளிகளுக்கு மனிதாபிமானத்துடன் ஜெர்மனி அடைக்கலம் கொடுத்து சிகிச்சை அளித்து வருகிறது.
ஐரோப்பாவை தற்போது கதிகலங்க வைத்து வரும் கொரோனா வைரஸூக்கு இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், வைரஸ் தொற்றுக்கு ஆளாகும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் அந்நாடுகள் திணறி வருகின்றன.
நெல்லை : மேலப்பாளையம் ஊரின் அனைத்து வாயில்களும் அடைப்பு
மற்ற நாடுகளை காட்டிலும் இத்தாலியே கொரோனா உயிரிழப்புகளில் முதலிடத்தில் உள்ளது. உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42,114ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கொரோனாவால் 8,57,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 837 பேர் உயிரிழந்ததால் அங்கு உயிரிழப்பு 12,428ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஜெர்மனி முன்வந்துள்ளது. இதன் காரணமாக அவ்விரு நாடுகளில் இருந்தும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் ஜெர்மனிக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
“கங்குலி கொடுத்த “சப்போர்ட்” தோனி கொடுக்கல”-யுவராஜ் சிங் ஆதங்கம்
ஜெர்மனியிலும் கொரோனா பாதிப்பு இருந்தாலும் இறப்பு விகிதம் கட்டுக்குள்ளேயே இருக்கிறது. தவிர, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதன் மூலம், தங்கள் நாட்டில் அந்நோய் தீவிரமடையும் பட்சத்தில் பதறாமல் சிகிச்சை அளிக்க அந்த அனுபவம் உதவும் என ஜெர்மனி கருதுகிறது. இதன் காரணமாகவே இத்தாலி, பிரான்ஸ் நாடுகளின் நோயாளிகளுக்கு ஜெர்மனி சிகிச்சை அளிக்க முன்வந்திருப்பதாக தெரிகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM