கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த நேரத்தில் பரப்பாக ஓடிக்கொண்டு இருந்த
மனிதர்கள் மட்டுமல்ல அவர்களது வாகனங்களும் அமைதியாக ஒரே இடத்தில் இருக்கின்றன. தினமும் நமக்காக ஓடிஓடி உழைத்த காரும்,
பைக்கும் நிறுத்தப்பட்ட இடத்திலேயே நின்று கொண்டு இருக்கின்றன. அதனால் அதனையும் நாம் கவனிக்க வேண்டும். சின்ன சின்ன
கவனம் எடுத்துக்கொண்டால் இந்த ஊரடங்கு ஓய்வு நம்முடைய வாகனங்களுக்கு நல்ல ஓய்வாகவே இருக்கும். என்னவெல்லாம் செய்யலாம்?
நல்ல இடத்தில் பார்க் செய்யுங்கள்:
நீண்ட நாட்கள் ஒரே இடத்தில் நிற்கும் என்பதால் அதனை பாதுகாப்பான இடத்தில் பார்க் செய்வது முக்கியம். காரோ, பைக்கோ அதற்கான
உறைகளை கொண்டு மூடி பார்க் செய்து விட்டால் தூசி, மண், பறவைகளின் எச்சங்கள், போன்றவற்றை தவிர்க்கலாம்.
பேட்டரியை துண்டித்துவிடுங்கள்:
நீண்ட நாட்களுக்கு ஒரே இடத்தில் நிற்பது உறுதி என்றால் நிச்சயம் பேட்டரியை துண்டித்துக்கொள்ளலாம். இல்லை என்றால், இரண்டு
நாட்களுக்கு ஒருமுறை வண்டியை நிற்கும் இடத்திலேயே ஸ்டார்ட் செய்து கொஞ்ச நேரம் எஞ்சின் , பேட்டரியை இயங்க வைக்கலாம்.
உட்புற சுத்தம் அவசியம்:
காரின் வெளிப்பகுதியை விடவும் உட்புறம் சுத்தமாக இருக்க வேண்டும். உணவுப் பொருட்களை காருக்குள் வைத்துவிட்டு அப்படியே நிறுத்தி
விடுவதால் தேவையற்ற துர்நாற்றம் ஏற்படும். அதேபோல் 3 நாட்களுக்கு ஒருமுறை காரினை ஸ்டார்ட் செய்து ஏசி ஆன் செய்து
ஓடவிடலாம்.அதேபோல் காரின் உட்புறத்தை 4 அல்லது 5 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்து நிறுத்தி வைக்க வேண்டும். அதேபோல் கார்
கண்ணாடிகளை நிச்சயம் மூடி வைக்க வேண்டும்
ஹேண்ட் பிரேக்கை தவிர்க்கவும்:
நீண்ட நாட்கள் ஒரே இடத்தில்நிற்கும் என்பதால் ஹேண்ட் பிரேக் போட்டு நிறுத்துவதை தவிர்க்கலாம். அதற்கு பதிலாக முதல் கியரில்
நிறுத்தி வைக்கலாம். அதுபோக கூடுதல் பாதுகாப்பாக டயருக்கு கீழ் மரக்கட்டைகள், கற்களை வைக்கலாம்.
செண்டர் ஸ்டேண்ட் போட்டு நிறுத்தவும்:
இரு சக்கர வாகனங்களை செண்டர் ஸ்டேண்ட் போட்டு நிறுத்துவது நல்லது. இப்படி நிறுத்துவதால் பெட்ரோல், ஆயில் போன்றவை
ஒருபுறமாக இருக்காமல் சமதள அளவில் இருக்கும். வீட்டிற்கு வெளியில் பார்க் செய்பவர்கள் வழக்கமான side lock மட்டுமின்றி
மேற்கொண்டு பாதுகாப்பு அம்சங்களையும் கையாளலாம். டிஸ்க் லாக் போன்றவற்றை பயன்படுத்தி கொள்ளலாம்.
கிரீஸ் மற்றும் ஆயில்:
நீண்ட நாட்கள் நிற்கும் இரு சக்கர வாகனத்தின் செயின், கிளட்ச், சஸ்பென்சன்ஸ், சாவி போடும் இடம், போன்ற ஆயில் அல்லது கிரீஸ்
போட ஏதுவான இடங்களை கவனிக்க வேண்டும். 10 நாட்களுக்கு ஒருமுறை அந்தந்த இடங்களை கிரீஸ் மற்றும் ஆயில் மூலம் பராமரிப்பது
நல்லது.
புகைப்படங்கள்: ExpressDrives
கிருமிநாசினி சுரங்கத்துக்குள் நுழைந்த பின்னரே சந்தைக்கு செல்லலாம்- திருப்பூரில் புது ஐடியா