கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் அதிக நிதியை அளித்து வருகின்றனர்.

உலக அளவில் கொரோனா அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37,820ஆக அதிகரித்துள்ளது. உலக அளவில் கொரோனாவால் 7,85,807 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 1,65,659 பேர் சிகிச்சைப்பெற்று குணமடைந்துள்ளனர். கொரோனாவைத் தடுக்க உலக நாடுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனாவுடன் இந்திய அரசும் போராடி வருகிறது. கொரோனாவை எதிர்த்து போராட நிதி உதவி வேண்டுமென இந்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

image

அதேபோல ஒவ்வொரு மாநில அரசும் நிதி உதவி கோரியுள்ளது. தமிழக முதலமைச்சர் பழனிசாமியும் நிதி அளிக்கலாம் என கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிலையில் தொழில் அதிபர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் தங்களால் முடிந்த நிதியை பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்பி வருகின்றனர். பிரபலங்கள் மட்டுமின்றி மழலைகள் முதல் ஒவ்வொரு குடிமகன்களும் தங்களால் முடிந்த நிதியை அனுப்பி வருகின்றனர்.

image

இதில் குறிப்பாக தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் அதிக நிதியை அளித்து வருகின்றனர். பாகுபலி திரைப்பட நடிகர் பிரபாஸ், ரூ.4 கோடி நிவாரணம் அளித்துள்ளார். அதில் 3 கோடி ரூபாய் பிரதமர் நிவாரணநிதிக்கும், தெலங்கானா மற்றும் ஆந்திரா முதல்வர்களின் நிவாரண நிதிக்கு தலா ரூ.50 லட்சம் வழங்கியுள்ளார்.

இதேபோல் பவன் கல்யாண், ராம் சரண், சிரஞ்சீவி, மகேஷ் பாபு ஆகியோரும் நிதி உதவி அளித்துள்ளனர். பவன் கல்யாண் ரூ.2 கோடி நிதியுதவி அளித்துள்ளார். ராம் சரண் ரூ.70 லட்சம் நிதியுதவி செய்துள்ளார். அதேபோல் சிரஞ்சீவி ரூ.1 கோடியும், மகேஷ்பாபு ஒரு கோடியும் நிதியுதவி அளித்துள்ளனர்.

 கொரோனாவால் உயிரிழந்தவர்களை புதைக்க மிகப் பெரிய இடுகாட்டை அமைத்தது ஈராக் அரசு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.