கொரோனா பாதிப்பின் காரணமாக 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது. இதனால் மக்களின் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இந்தச் சூழலில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்காகப் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது மத்திய அரசு.

மக்கள் வாழ்வாதாரம்

Also Read: ஒரே நாளில் 157 பேர்! – இந்தியாவில் 1,251 ஆக அதிகரித்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை #NowAtVikatan

மாநிலங்களுக்கும் தற்போதைய நிதி நெருக்கடியைச் சமாளிப்பது பெரும் சவாலாக மாறியிருக்கிறது. தெலங்கானா மாநிலத்தில், இந்த அசாதாரண நிதி நெருக்கடியை சமாளிக்கும் விதமாக, அம்மாநில அரசு ஊழியர்களுக்கு அவர்கள் பணியை அடிப்படையாகக் கொண்டு, ஊதியத்தில் 10 சதவிகிதத்திலிருந்து 75 சதவிகிதம் வரை பிடித்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தெலங்கானா மாநிலமுதல்வர் சந்திரசேகர ராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தெலங்கானாவில் இதுவரை 71 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ஊரடங்கு உத்தரவு தீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மக்களின் அன்றாட வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதால் அரசு ஊழியர்களின் ஊதியத்தில் ஒரு பகுதியைப் பிடித்தம் செய்து மக்களின் நலனுக்குப் பயன்படுத்தலாம் என முடிவு செய்துள்ளோம்.

கொரோனா வைரஸ்

முதல்வர், எம்.எல்.ஏ, எம்.எல்.சி ஊதியத்திலிருந்து 75 சதவிகிதம், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் அதிகாரிகளின் ஊதியதிலிருந்து 60 சதவிகிதம், மற்ற அரசு ஊழியர்களிடம் இருந்து 50 சதவிகிதம், கடைநிலை ஊழியர்களின் ஊதியத்திலிருந்து 10 சதவிகிதம் பிடித்தம் செய்யப்படும். மாநிலத்தில் நிலவும் சூழலை சாமளிக்க எல்லோருடைய உதவியும் தேவை. மற்றவர்களுக்கு முன்மாதிரியாக நான் என் ஊதியத்தைக் கொடுக்கிறேன். சேர்ந்து செயலாற்றி, கொரோனாவிலிருந்து மீண்டெழுவோம்” என்று கூறியுள்ளார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.