பட்டுக்கோட்டை அருகே உள்ள களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் காஷ்மீரில் பணியில் இருந்த போது நெஞ்சுவலியால் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமச்சந்திரன்

பட்டுக்கோட்டை அருகே உள்ள களத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு ஒரு பெண், ஒரு ஆண் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். மகளுக்குத் திருமணமாகிவிட்டது. மகன் படித்துக் கொண்டிருக்கிறார். தற்போது காஷ்மீர் எல்லையில் பணிபுரிந்து வந்த ராமச்சந்திரன் நேற்று மாரடைப்பால் இறந்து விட்டார். இந்தத் தகவல் அவர் குடும்பத்தை மட்டுமல்லாமல் களத்தூர் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து ராமச்சந்திரனின் உறவினரான செந்தில்குமாரிடம் பேசினோம், “சுமார் இருபது வருடங்களாக இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வந்த ராமச்சந்திரன் நெஞ்சு வலியால் இறந்து விட்டார் என்ற செய்தி பெரும் இடியாக வந்துள்ளது. எல்லோருடனும் அன்பாகப் பழகக்கூடியவர். எப்போது அவர் ஊருக்கு வந்தாலும் எல்லோரையும் பார்த்து நலம் விசாரிப்பார். ஊரில் நடந்த விஷயங்களையும் கேட்டுத் தெரிந்து கொள்வார்.

Also Read: `டெல்லியிலிருந்து திரும்பிய 5 பேர்; தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா!’ – 74 ஆக அதிகரித்த எண்ணிக்கை #NowAtVikatan

விவசாயத்தின் மீது அவருக்கு ஆர்வம் அதிகம். ராமச்சந்திரன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்து விட்டு மீண்டும் பணிக்குச் சென்றார். போகும்போது எல்லோரிடமும், உடம்பை நல்லா பார்த்துக்கங்க என அக்கறையுடன் கூறிவிட்டுச் சென்றார். அனைவரிடத்திலும் அன்புகாட்டக் கூடிய அவர் இறந்தவிட்டதாக வந்த செய்தியை ஏற்றுக்கொள்ள முடியாமல் ஊர் மக்கள் பலரும் தவித்து வருகின்றனர்.

தற்போது கொரோனா பரவுவதைத் தடுப்பதற்காக இந்தியா முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் வாகனப் போக்குவரத்துக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இந்தநிலையில் ராமச்சந்திரன் உடல் சொந்த ஊருக்குக் கொண்டு வரப்படுமா என்கிற சந்தேகம் எல்லோருக்கும் ஏற்பட்டுள்ளது.

Also Read: `எனக்கு கொரோனா தொற்று இருக்கு!’ -எச்சில் தாக்குதல்; நியூசிலாந்து போலீஸாருக்கு அதிர்ச்சிகொடுத்த நபர்

ராணுவ வீரர்கள் இறந்தால் எப்போதும் பின்பற்றப்படும் நடைமுறையைப் போல ராமச்சந்திரன் உடலை அவரது சொந்த ஊருக்குக் கொண்டு வர வேண்டும். மேலும், ராணுவ வீரர்கள் இறந்தால் எப்படி மரியாதை செய்து இறுதி அஞ்சலி செலுத்தி அவர்கள் உடலை அடக்கம் செய்வார்களோ அதே போல் குண்டுகள் முழங்க அவரது உடலை அடக்கம் செய்ய வேண்டும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.