கொரோனா வைரஸ் விழிப்புணர்வுக்காக மருத்துவர்கள் சிலர் செய்த டிக் டாக் வீடியோ வைரலாகியுள்ளது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கிக் கொண்டிருக்கிறது. சீனாவை தவிர மற்ற நாடுகளில் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் சென்றுகொண்டிருக்கிறது. மக்கள் யாரும் கூடியிருக்க வேண்டாம், தனித்து இருங்கள் என உலக நாடுகள் அனைத்தும் அறிவுறுத்தியுள்ளன. இந்தியா உட்பட பல நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இதனால் பெரும்பாலான மக்கள் வீடுகளில் குடும்பத்தினருடன் இருக்கின்றனர்.

image

ஆனால், இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தங்கள் குடும்பத்தினருடன் இருக்காமல் கொரோனா வைரஸுக்கு எதிராகவும், கொரோனா வைரஸ் பாதித்தவர்களை காப்பாற்றவும் மருத்துவர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பணிபுரிந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு உலகம் முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த நேரத்தில் அனைவரும் கூறும் ஒரே அறிவுரை, மக்கள் வீட்டில் இருந்தால் மருத்துவர்களுக்கு நல்லது என்பது தான்.

image

இந்நிலையில், 5 மருத்துவர்கள் சேர்ந்து செய்த டிக் டாக் வீடியோ ஒன்று தற்போது வைரலாகியுள்ளது. அதில் ஆங்கிலப் பாடல் ஒன்றுக்கு நடனமாடிக்கொண்டே 5 மருத்துவர்கள் ஒருவர் பின் ஒருவராக கையில் பதாகையுடன் நகர்ந்து செல்கின்றனர். அந்த பதாகைகளில் “தயவுசெய்து எங்களுக்காக வீட்டில் இருங்கள்” என எழுதப்பட்டிருக்கிறது. இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து பலரும் மருத்துவர்களுக்கு ஆதரவு பதிவிட்டு வைரலாக்கியுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த வீட்டில் தனித்திருப்பதே ஒரு வழி என அனைவராலும் கூறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

‘ஹோட்டல், மார்க்கெட் இல்லை’: நிலத்திலேயே வாடும் வாழை இலைகள் – துயரத்தில் விவசாயிகள்

@aubstmary

You know the deal, we’re here for you! ##PlayByPlay ##MoodBoost ##fyp ##onmybreak ##nurses ##healthcareworkers ##frontline

♬ Something New feat. Ty Dolla $ign – Wiz Khalifa

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.