கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுக்க ஏப்ரல் 14 வரை ஊடரங்கு அமல்படுத்தப்படுகிறது. இதனால், வேலையிழப்பு, சம்பளக் குறைப்பு, வருமான இழப்பு ஏற்பட்டு பலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு உதவும் விதமாக, 2019-20 நிதி ஆண்டிற்கான வரிச் சலுகை முதலீடுகளை 2020 ஜூன் வரைக்கும் மேற்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதில், பலருக்கும் குழப்பம் இருக்கிறது. நிதி ஆண்டு, 2019-20 ஜூன் வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாகப் பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அது தவறு. 2019-20 நிதி ஆண்டு நீடிக்கப்படவில்லை என்று மத்திய நிதி அமைச்சகம் வருமான வரித் துறையும் ட்விட்டர் பக்கங்களில் தெரிவித்துள்ளன.

2019-20 நிதி ஆண்டு 2020 மார்ச் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதாவது, ஒருவரின் வருமானக் கணக்கீடு, மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்துவிடுகிறது. அதேநேரத்தில், வரிச் சலுகைக்கான முதலீட்டுக் காலம் மட்டும் ஜூன் 30-ம் தேதி வரைக்கும் நீடிக்கப்பட்டுள்ளது என்பதுதான் நிதி அமைச்சகத்தின் அறிவிப்பாக உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால், பல பணிகள் பாதிக்கப்பட்டு, வரிச் சலுகைக்கான முதலீட்டைச் செய்ய முடியாமல் போனதால், இந்த முதலீட்டுக் காலம் மட்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Also Read: புது நிதியாண்டு: சேமிப்பை பெருக்கும் வீட்டு பட்ஜெட்!

80சி, 80டி போன்ற பிரிவுகளின் கீழ் வருவதற்கான முதலீட்டை ஜூன் 30-ம் தேதி வரை மேற்கொள்ளலாம். ஏற்கெனவே எடுத்திருக்கும் லைஃப் மற்றும் ஹெல்த் பாலிசிகள், பி.பி.எஃப் மற்றும் என்.பி.எஸ் முதலீடுகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரைக்கும் கட்ட வேண்டிய பிரீமியம் மற்றும் தவணைகளை ஜூன் 30 வரையில் செலுத்தும்பட்சத்தில், 2019-20-ம் நிதி ஆண்டில் வரிச் சலுகை பெறலாம். புதிதாக எடுக்கப்படும் லைஃப் மற்று ஹெல்த் பாலிசிகள், புதிதாக ஆரம்பிக்கும் பி.பி.எஃப் மற்றும் என்.பி.எஸ். முதலீடுகளுக்கு ஜூன் 30-ம் வரையில் செலுத்தும் தொகைக்கு 2019-20-ம் நிதி ஆண்டில் வரிச்சலுகை பெறலாம்

வீட்டுக் கடன் வட்டிக்கு மார்ச் 31-ம் தேதி வரைக்கும் சேர்ந்த தொகையை ஜூன் 30-ம் தேதி வரையில் செலுத்தும்பட்சத்தில் 2019-20-ம் நிதி ஆண்டில் வரி விலக்கு பெறலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.