அடுத்த ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை மாதம் நடைப்பெற்ற இருந்த ஒலிம்பிக், கொரோனா அச்சம் காரணமாகக் கடந்த சில தினம் முன்பு ஒத்தி வைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போது மீண்டும் எப்போது போட்டிகள் நடத்தப்படும் என்பது குறித்துத் தெரிவிக்கப்படவில்லை. இந்த அறிவிப்பு இந்த ஆண்டு கடைசியாகக் கலந்து கொண்டும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற ஆவலோடு இருந்த வீரர்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது.
இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக்ஸ் கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 23 தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இந்தப் போட்டிகள் ஆகஸ்ட் 8 வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாரா ஒலிம்பிக்ஸ் போட்டிகள் ஆகஸ்ட் 24 இல் தொடங்கி செப்டம்பர் 5 வரை நடைபெற உள்ளன.
இது குறித்து வெளியாகியுள்ள ஒரு செய்திக்குறிப்பில் “இந்தப் புதிய தேதிகளைச் சுகாதார அதிகாரிகள் வழங்கியுள்ளனர். ஒலிம்பிக் போட்டிகளில் ஈடுப்பட்டுள்ள அமைப்புகள் அனைவருக்கும் கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள இடையூறுகளைச் சமாளிக்க அதிகபட்ச நேரத்தை இந்தக் கால இடைவெளி அளிக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு குறித்து ஐ.ஓ.சி தலைவர் தாமஸ் பாக், ஜூலை-ஆகஸ்ட் காலக்கெடுவைத் தேர்ந்தெடுத்திருப்பது சர்வதேச விளையாட்டு கூட்டமைப்புகளின் “ஒருமித்த ஆதரவை” பெற்றுள்ளது என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM