உத்தரப்பிரதேச மாநிலத்திலிருந்து போர்வை, தார்ப்பாய் விற்பனை செய்வதற்காக வந்து, ஒரே இடத்தில் தங்கியிருக்கும் 44 இளைஞர்களுக்குக் கொரோனா வைரஸ் பரவாமல் பாதுகாப்பது எப்படி என்று அதிகாரிகள் ஆலோசனை நடத்திவருகிறார்கள்.

இளைஞர்களுடன் அதிகாரிகள்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை காந்திஜி ரோட்டில், நூர் ஹலீபா பள்ளிவாசல் அமைந்துள்ளது. இதிலுள்ள சிறிய ஹாலில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 44 இளைஞர்கள் தங்கியுள்ளனர். இவர்கள், கடந்த 6 மாதகாலமாக போர்வை, தார்ப்பாய் போன்றவற்றை மொத்தமாக மயிலாடுதுறைக்குக் கொண்டுவந்து இங்கிருந்து கும்பகோணம், தஞ்சாவூர், சிதம்பரம், நாகப்பட்டினம், திருவாரூர் எனப் பல்வேறு இடங்களுக்குப் பிரிந்து சென்று விற்பனை செய்கிறார்கள்.

Also Read: `ரெயின்கோட்; ஹெல்மெட் மட்டுமே பாதுகாப்பு’ – கொரோனா போரில் உயிரைப் பணயம் வைக்கும் மருத்துவர்கள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த பின்னர் உணவகங்கள் மூடப்பட்டதால் உணவுக்கு வழியின்றித் தவித்துள்ளனர். எனவே, பள்ளிவாசலில் தஞ்சமடைந்த அவர்களுக்குச் சில தினங்கள் உணவளித்த பள்ளிவாசல் நிர்வாகத்தினர் ஓரிடத்தில் இத்தனை பேர் தங்கி இருப்பது குறித்து தாசில்தாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

உடனே தாசில்தார் முருகானந்தம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாஸ்கரன் ஆகியோர் பள்ளிவாசலுக்கு விரைந்து வந்தனர். அந்த இளைஞர்களுக்குக் கொரோனா வைரஸ் தாக்கி உள்ளதா என்பதைப் பரிசோதனை செய்தனர். நல்லவேளையாக நோய்த் தொற்று இவர்களிடத்தில் இல்லை. உடனடியாக அவர்களுக்கு நகராட்சி மூலம் உணவு வழங்க ஏற்பாடு செய்தனர்.

இளைஞர்கள்

தினமும் காலை, மாலை வருகைப் பதிவேடு பராமரிக்கப்படுகிறது. மருத்துவப் சோதனைகளும் செய்யப்படுகின்றன. “எக்காரணம் கொண்டும் இந்த இடத்தை விட்டு வெளியில் வரக்கூடாது” என்று காவல்துறையினர் உத்தரவு பிறப்பித்துள்ளனர். அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என்று அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.