உலகம் முழுவதும் கொரோனாவின் கோரப் பிடியைப் பற்றிய சோகச் செய்திகள் வந்துகொண்டிருக்கும் வேளையில், அண்டை மாநிலத்திலிருந்து நம்பிக்கையை அதிகரிக்கும் நல்ல செய்தி வந்துள்ளது.

93 வயது முதியவரும் அவரின் 88 வயதான மனைவியும் கொரோனாவிலிருந்து முழுவதுமாக மீண்டு வந்துள்ளனர். இந்தத் தம்பதியின் பிள்ளைகள் மற்றும் பேரப் பிள்ளைகள், இத்தாலியிலிருந்து சமீபத்தில் திரும்பியுள்ளனர்.

Old couple

அவர்களிடமிருந்து மொத்த குடும்பத்துக்கும் கொரோனா தொற்று பரவியது. குறிப்பாக, இந்த வயதான தம்பதியர் அதிகம் பாதிக்கப்பட்டனர். இருவருக்கும் ஏற்கெனவே சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த பாதிப்புகளும் இருந்துள்ளன.

மார்ச் 6-ம் தேதி, இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சையளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைக்குப் பின்னரும் அவர்களின் நிலைமை மோசமாகிக்கொண்டேபோனது.

corona

ஒருகட்டத்தில், இருவரும் தங்களுக்கு சிகிச்சை வேண்டாம், வீட்டுக்கு அனுப்பிவிடுங்கள் என மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளனர். இருப்பினும், மருத்துவர்கள் அவர்களை சிகிச்சைக்கு சம்மதிக்கவைத்து, தொடர்ந்து சிகிச்சையளித்துள்ளனர்.

மிகவும் மோசமான நிலையிலிருந்து இவர்களை மீட்டெடுக்க, ஏழு மருத்துவர்களும் 25 செவிலியர்களும் போராடியுள்ளனர். தீவிர சிகிச்சைக்குப் பின்னர், இருவரும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர்.

Doctor

Also Read: `கொரோனா அச்சம்; அளவுக்கு அதிகமான மலேரியா மருந்து..?’ -அஸ்ஸாம் மருத்துவருக்கு நேர்ந்த துயரம்

முதியோருக்கு சிகிச்சையளித்த மருத்துவக் குழுவினருக்கு பாராட்டைத் தெரிவித்துள்ள அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா, “முதியவர்கள் இருவரும் சாவின் விளிம்பிலிருந்து மீண்டு வந்துள்ளனர். இவர்களுக்கு சிகிச்சையளித்த ஒரு செவிலியருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவருக்கும் தேவையான உதவிகள் செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

முதியவர்கள் கொரோனாவின் பிடியிலிருந்து மீண்டெழுந்த சம்பவம், பிற நோயாளிகளுக்கும் நம்பிக்கை தரும் விதமாக அமைந்துள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.