இந்தியாவில் கொரோனா அச்சம் ஒருபுறம் இருக்க.. ஊரடங்கு உத்தரவு.. பசி… உறைவிடப் பிரச்னை எனப் பலரின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. மத்தியப்பிரதேச சாலையில் எலும்பு முறிவு ஏற்பட்ட காலுடன் நடைப்பயணமாக சொந்த ஊருக்குத் திரும்பும் இளைஞர் ஒருவர் கால்களில் கட்டப்பட்டிருந்த மாவுக்கட்டினை சரிசெய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காண்போரின் மனதை உருக்குவதாக அந்த வீடியோ அமைந்துள்ளது.

ராஜஸ்தானைச் சேர்ந்த பன்வர்லால் என்ற அந்த இளைஞர் மத்தியப்பிரதேச மாநிலம் பிபாரியா நகரில் தினக்கூலியாகப் பணியாற்றி வந்துள்ளார். வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்ட சிறிய விபத்து ஒன்றில் அவரது மூன்று விரல்கள் மற்றும் கணுக்காலில் முறிவு ஏற்பட்டுள்ளது.

Also Read: `ரெயின்கோட்; ஹெல்மெட் மட்டுமே பாதுகாப்பு’ – கொரோனா போரில் உயிரைப் பணயம் வைக்கும் மருத்துவர்கள்

இதற்காக சிகிச்சை எடுத்து வந்துள்ளார். கணுக்காலில் முறிவு ஏற்பட்டதையடுத்து அதைச் சரிசெய்வதற்காக மாவுக்கட்டு போட்டுள்ளார். கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் தற்போது வேலையிழந்துள்ளார். மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் போக்குவரத்து வசதியும் இல்லை. இதையடுத்து கால்நடையாக தனது சொந்த ஊருக்குப் பயணமாகியுள்ளார்.

கொரோனா

ஆங்கில ஊடகத்திடம் பேசியுள்ள பன்வர்லால் “நான் வேலை பார்த்த இடத்திலிருந்து 500 கிலோ மீட்டர் தூரம் ஒரு வாகனத்தில்தான் வந்தேன். மீதமுள்ள 240 கிலோ மீட்டரை கால்நடையாகக் கடக்க முடிவு செய்துள்ளேன். பாதுகாப்பு காரணங்களுக்காக மாநில எல்லையில் போலீஸார் என்னைத் தடுத்து நிறுத்துவார்கள் எனத் தெரியும். எனக்கு வேறு வழியில்லை. என் குடும்பத்தினர் அங்கு தனியாக இருக்கிறார்கள். எனக்கு வேலையும் இல்லை என்னால் அவர்களுக்குப் பணமும் அனுப்ப முடியாது. அதனால் வேறு வழியில்லாமல் என் காலில் உள்ள கட்டுகளை அவிழ்த்துவிட்டு நடக்கத் தொடங்கிவிட்டேன்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.