கொரோனாவிலிருந்து தப்பிக்க 21 நாள்கள் நம்மை நாமே வீட்டுக் காவலில் வைத்திருக்கிறோம். வொர்க் ஃபிரம் ஹோமாக இருந்தாலும்கூட, பொழுதைப் போக்க ஏதாவது செய்ய வேண்டும். திரைப்படம் பார்ப்பது, புத்தகம் படிப்பதெல்லாம் எப்படி ஒரு பொழுதுபோக்கோ, அப்படித்தான் வீட்டை சுத்தம் செய்வதும். இந்த நேரத்தில் வீட்டையும், வீட்டில் இருக்கும் வாகனங்களையும் மட்டும் சுத்தம் செய்தால் போதாது .தினமும் நீங்கள் அணியும் ஹெல்மெட் பக்கம் கொஞ்சம் உங்கள் கவனத்தைத் திருப்புங்கள்.

ஹெல்மெட்

ஹெல்மெட்டை ஏன் சுத்தப்படுத்த வேண்டும்?

அழுக்கான உடைகளை அணிவதில்லை, அழுக்குப் படிந்த வீட்டில் இருப்பதில்லை. அப்படியிருக்க, நம் தலையில் கிரீடம் போல தினமும் மாட்டிச்செல்லும் ஹெல்மெட்டை மட்டும் ஏன் அழுக்காகவே வைத்திருக்க வேண்டும். கொஞ்சம் இப்படியும் யோசித்துப்பாருங்கள், உங்கள் ஹெல்மெட்டில் கொரோனா வைரஸ் சம்மணம் போட்டு உட்கார்ந்திருந்தால்? சுத்தம் செய்ய உத்வேகம் வந்துவிட்டதா..? இது பெரிய வேலையெல்லாம் இல்லை. பைக்கின் செயினை சுத்தம் செய்வதைவிட சுலபமான விஷயமே.

என்னென்ன தேவை?

பாதி பக்கெட் அளவு வெதுவெதுப்பான தண்ணீர், நம் தலைக்குப் போடும் ஏதாவது ஒரு ஷாம்பு (குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் ஷாம்புவாக இருந்தால் இன்னும் சிறப்பு), இலகுவான துணி (மைக்ரோ ஃபைபர் கிளாத் இருந்தால் செம), கடைசியாக டூத் பிரஷ். பாத்திரம் கழுவும் ஜெல், சோப்பு, பிளீச்சிங் பவுடர் போன்றவற்றை நிச்சயம் பயன்படுத்தக்கூடாது. ஷாம்புவைக்கூட அதிகம் பயன்படுத்தத் தேவையில்லை. நம் தலைக்குப் போடும் அளவுக்கு பயன்படுத்தினால் போதும்.

ஹெல்மெட்

எப்படி சுத்தம் செய்வது?

ப்ளூடூத், கோ-ப்ரோ போன்ற எலெக்டரானிக் பொருள்கள் ஏதாவது ஹெல்மெட்டில் மவுண்ட் செய்து வைத்திருந்தால் அதை முதலில் எடுத்துவிடுங்கள். ஆஃப்ரோடு அல்லது டூயல்ஸ்போர்ட் ஹெல்மெட்டாக இருந்தால், ஹெல்மெட்டுக்கு மேல் கொடுக்கப்பட்டிருக்கும் ’பீக்’கை (peak) கழற்றிடுங்க. ஹெல்மெட்டின் chin பகுதியில் ப்ரீத் டிஃப்லெக்டார் இருந்தால் அதையும் கழற்றிவிடுங்கள்.

ஷெல், சைஸர் மற்றும் லைனர்

ஹெல்மெட்டின் உள்பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் சின் பேட் (chin pad), லைனர், கம்ஃபர்ட் பேட் (comfort pad) போன்றவற்றை எடுத்துவிட வேண்டும். பெரும்பாலான ஹெல்மெட்களில் இவை ஸ்நேப் பட்டன்கள் மூலமாகவே பொருத்தப்பட்டிருக்கும் கொஞ்சம் இழுத்தால் கையோடு வந்துவிடும். சில ஹெல்மெட்களில் இவை கொக்கி, காந்தம் அல்லது வெல்கிரோ வைத்து இணைக்கப்பட்டிருக்கும். ஐஎஸ்ஐ முத்திரை பதித்த சில ஹெல்மெட்களில் லைனர்களைக் கழற்ற முடியாது. முடியவில்லை என்றால் பிரச்னை இல்லை, இவற்றை அப்படியே கூட கழுவலாம். கொஞ்சம் அதிகம் மெனக்கெட வேண்டியிருக்கும் அவ்வளவுதான்.

விலை குறைவாகக் கிடைக்கும் பெரும்பாலான தரமான ஹெல்மெட்டிலேயே வைசரில் UV கோட்டிங் மற்றும் ஆன்ட்டிஃபாக் கோட்டிங் வரும். அதனால், இந்த கண்ணாடி பகுதியைத் துடைக்கும்போது வெறும் தண்ணீரை மட்டுமே பயன்படுத்தவேண்டும். சுத்தம் செய்யும் திரவமோ, சோப்போ தேவையில்லை. 

ஹெல்மெட்

வைஸரை தண்ணீரில் முழுமையாக நனைக்கத் தேவையில்லை. ஈரமான துணியில் அழுக்குப் போகும்படி துடைத்தாலே போதுமானது. தூசு, பறவை எச்சம் அல்லது பூச்சி ஏதாவது ஒட்டியிருந்தால் ஷெல் பகுதிக்கு செய்தது போலவே ஈரமான துணியை அதன்மீது கொஞ்சம் நேரம் வைத்துவிடுங்கள். பின்லாக் பொருத்தியிருக்கும் ஹெல்மெட் என்றால் உள்பக்கம் இருக்கும் பின்லாக்கை தனியாக எடுத்துத் துடைத்துவிட்டு, பிறகு பொருத்திக்கொள்ளலாம். கழற்றும்போது பின்லாக் கேஸ்கட் மீது எக்ஸ்ட்ரா கவனம் இருக்கட்டும்.

வைஸரின் உள்பக்கம் சில ஹெல்மெட்களில் சன்வைஸர் அல்லது சன் ஷீல்டு வரும். அதைக் கழற்றுவது பெரிய தலைவலி. மேலும் அதில் அதிகமாக தூசு படிய வாய்ப்புகள் குறைவு என்பதால் ஈரத்துணியை மட்டும் பயன்படுத்துங்கள்.

ஹெல்மெட்

சுத்தம் செய்த ஹெல்மெட்டை மீண்டும் அசெம்பிள் செய்யும்போது, முதலில் லைனரைப் பொருத்திவிட்டு மிச்ச பாகங்களைப் பொருத்தலாம். வைஸரை கடைசியாகப் பொருத்துங்கள். லாக்-டவுண் முடிந்தவுடன் சந்தோஷமாகவும், சுத்தமாகவும் ரைடு கிளம்புவோம்.

வெதுவெதுப்பான தண்ணீரில் டவலை நனைத்து ஹெல்மெட் மீது போர்த்திவிடுங்கள். பல காலமாகப் படிந்திருக்கும் அழுக்கு, ஹெல்மெட்டில் பட்டு செத்துப்போன பூச்சியின் கழிவுகள், பறவை எச்சம் போன்றவை சுத்தம்செய்ய சுலபமாகிவிடும். அழுத்தித் துடைக்கத் தேவையில்லை, ஹெல்மெட்டில் கீறல்கள் விழாமல் பார்த்துக்கொள்ளலாம். 

ஒரு பக்கம் ஹெல்மெட்டின் ஷெல் (shell) பகுதி போர்த்தியபடி அப்படியே இருக்கட்டும். உள்பகுதியைக் கழுவிவிட்டு ஹெல்மெட்டை துடைக்கலாம். முகத்திலிருந்து வரும் வியர்வை மற்றும் தலையில் வைக்கப்பட்ட தேங்காய் எண்ணெய், முகத்தில் பூசிய மேக்கப் போன்றவற்றை லைனர்கள் பல மாதங்களாக உள்வாங்கியிருக்கும். அதனால், இதை ஷாம்ப்பு வைத்துக் கழுவ வேண்டும். துணி பவுடர் கூட போடலாம். கழுவிய பிறகு இதில் வாசனை அப்படியே இருக்கும் என்பதால், ஷாப்பு இன்னும் நல்ல சாய்ஸ்.

ஹெல்மெட்

ஒரு பக்கெட் அல்லது பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் ஷாம்புவை கலந்து அதில் ஹெல்மெட் லைனரை முக்கி எடுங்கள். உள்ளேயே வைத்து அழுத்தியும், தேய்த்தும் துடைத்துவிடுங்கள். எந்தக் கோபத்தையும் அதன்மீது காட்டத் தேவையில்லை. ரொம்பவே இலகுவாகவும் மெல்லிசாகவும் தைக்கப்பட்டிருக்கும் என்பதால் அழுக்கு வெளியே வரும் அளவுக்கு துவைத்தால் போதும். Cheek pad, தண்ணீர் அதிகம் உறிஞ்சும் பகுதி. அதனால், இதைத் தனியாக எடுத்து தண்ணீரைப் பிழிந்துவிட்டு, பிறகு உலர்த்த வேண்டும்.

ஹெல்மெட்

அதை ஒரு ஓரமாகக் காயவைத்துவிட்டு, ஹெல்மெட்டின் ஷெல் பகுதியை எடுக்க வேண்டியதுதான். ஹெல்மெட்டை சுத்தம் செய்யும்போது, வைசரை தனியாகக் கழற்றி சுத்தம் செய்ய வேண்டும். எந்த சோப்பு அல்லது சொல்யூஷனையும் பயன்படுத்தத் தேவையில்லை. வெதுவெதுப்பான தண்ணீர் மட்டும் போதும். ஈரமான புது துணியை எடுத்து, ஹெல்மெட்டை சுற்றி அழுக்குப் போக துடைக்க வேண்டும் அவ்வளவுதான்.

ஹெல்மெட்

துணியை வைத்து சுத்தம் செய்ய கடினமான இண்டு இடுக்கு ஏதாவது இருந்தால், டூத் பிரஷ் வைத்து சுத்தம் செய்யலாம். ஹெல்மெட்டின் ஏர் வென்ட்டுக்குள் தூசு இருக்கும். அந்த இடங்களில் அழுத்தமாக ஊதினால் கொஞ்சம் சுத்தமாகும். பஞ்சர் ஒட்டப் பயன்படுத்தும் ஏர் கம்ப்ரஸர் இருந்தால் அதைக்கூட பயன்படுத்தலாம்.

Also Read: வெண்டிலேட்டர்கள் தட்டுப்பாடும் கொரோனா 
தீவிரமும்! உலக நாடுகளுக்கு இன்னொரு சிக்கல்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.