கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்துகொண்டே போகும் இந்தச் சூழலில், முகக் கவசம் மற்றும் வென்டிலேட்டர்கள் எனும் செயற்கை சுவாசக் கருவிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கான தேவையும் அதிகமாகியுள்ளது.

கொரோனா தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்ட நோயாளியின் ஒட்டுமொத்த சுவாசச் செயல்பாட்டை மேற்கொள்கிறது வென்ட்டிலேட்டர் எனும் கருவி. கொரோனா சிகிச்சைக்கு மிக முக்கியமாகத் தேவைப்படும் இந்த வென்டிலேட்டர்களின் தேவை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தது.

வென்ட்டிலேட்டர்

அதில், ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களை வென்டிலேட்டர்கள் உற்பத்தி செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. இதுவரை நம் நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளில் இருக்கும் 14,000 வென்டிலேட்டர்கள் கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. நோயாளிகள் மற்றும் மருத்துவர்களுக்காக 11.95 லட்ச N-95 முகக் கவசங்களும் தற்போது இருப்பில் உள்ளன என்றும் கடந்த இரண்டு நாள்களில் 5 லட்ச முகக் கவசங்கள் கூடுதலாக விநியோகிக்கப்பட்டுள்ளன என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. திங்களன்று மேலும் 1.40 லட்ச மாஸ்க்குகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேற்கொண்டு தேவைப்படும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (PPE) மற்றும் 3 லட்சம் கவர்ஆல் (coverall suits) எனப்படும் முழுப் பாதுகாப்பு உடைகள் ஏப்ரல் 4-ம் தேதிக்குள் வெளிநாட்டிலிருந்து பெறப்படும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Also Read: `Contact Tracking’ கொரோனா பரவலைத் தடுக்க சிங்கப்பூரின் முறை இந்தியாவில் சாத்தியமா?

ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் ஏற்கெனவே வென்டிலேட்டர் உற்பத்திசெய்யும் வேலையில் இறங்கிவிட்டார்கள். மாருதி சுஸுகி நிறுவனம், நொய்டாவில் இருக்கும் அக்வா ஹெல்த்கேர் எனும் நிறுவனத்துடன் கூட்டமைத்து வென்ட்டிலேட்டர்கள் செய்துதர முடிவுசெய்துள்ளது. இந்த நிறுவனத்துக்கு 10,000 வென்டிலேட்டர்கள் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவை ஏப்ரல் இரண்டாம் வாரத்திலிருந்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல மஹிந்திரா நிறுவனமும் மகாராஷ்டிராவில் இருக்கும் தனது கண்டிவாலி தொழிற்சாலையில் முகக் கவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. 

வென்ட்டிலேட்டர்

இதுதவிர, மத்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் (BEL) நிறுவனம் 30,000 வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யவேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதை அவர்கள் தங்களது உள்ளூர் உற்பத்தியாளர்களுடன் இணைந்து செய்யவேண்டும் என்றும் உத்தரவுகள் வந்துள்ளன.

மேலும், சர்வதேச நிறுவனங்களான ஹாமில்டன், மைண்ட்ரே மற்றும் டிரேகர் போன்ற நிறுவனங்களிடமும் வென்டிலேட்டர் செய்துதர ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் சீனாவிலுள்ள சப்ளையர்களை 10,000 மருத்துவக் கருவிகளுக்காக அணுகுவதாகவும் தெரிவித்துள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.