டெல்லி மேற்கு நிஜாமுதீனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டாப்லிகி ஜமாத் (Tablighi Jamaat) தற்போது கொரோனா வைரஸின் ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ளது. இந்த மாதம் இந்த ஜமாத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற பலருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட 9 இந்தியர்கள் உள்ளிட்ட 10 பேர் கொரோனா காரணமாக மரணமடைந்தனர் என்ற தகவல் பரவ நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நிஜாமுதீன்

காரணம், இந்த நிகழ்வில் நாடு முழுவதிலுமிருந்து மக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக 2,000 மக்கள் வரை கலந்துகொண்டதாகக் கூறப்பட்ட நிலையில் இப்போது 8,000 பேர் வரை இந்த நிகழ்வில் கலந்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்திலிருந்தும் 1,000 -க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். தற்போது இவர்களைக் கண்காணித்துப் பரிசோதனைகள் நடத்தும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

Also Read: `டெல்லி நிஜாமுதீன் ஜமாத்.. கொரோனா `ஹாட்ஸ்பாட்’ ஆகும் தமிழகம்?!’ -அதிர்ச்சி தரும் டிராக் ஹிஸ்டரி

மூன்று நாள்கள் டெல்லி நிஜாமுதீனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஜமாத்தின் இந்த நிகழ்வில் 300 -க்கும் அதிகமான வெளிநாட்டினர்களும் கலந்துகொண்டனர். அவர்களில் சிலர் மூலமாகவே மற்றவர்களுக்கும் கொரோனா பரவியதாகக் கூறப்படுகிறது. கடந்த இரு தினங்களில், அதாவது நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்குக் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட பிறகு காவலர்கள் அங்கு ஆய்வு நடத்தினர். அப்போது ஜமாத்தில் 281 வெளிநாட்டினர் இருந்துள்ளனர். மேலும் பல வெளிநாட்டினர் நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் சென்றுள்ளனர்.

நிஜாமுதீன் ஜமாத்

நேபாளம், மலேசியா, ஆப்கானிஸ்தான், மியான்மர். அல்கேரியா, இந்தோனேசியா, தாய்லாந்து, இலங்கை, வங்கதேசம், சிங்கப்பூர், பிரான்ஸ், குவைத் உள்ளிட்ட 16 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர். இவர்களது விசா காலம் முடியவில்லை என்றாலும், விசா விதிமுறைகளை மீறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: 10 லட்சத்தில் 32 பேர்; `விதிவிலக்கு’ கேரளா! – இந்தியாவில் கொரோனா டெஸ்ட் தரவுகள் சொல்வது என்ன?

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், “நிஜாமுதீன் நிகழ்வில் கலந்துகொண்ட பல வெளிநாட்டினர் இந்தியாவுக்கு டூரிஸ்ட் விசாவில் வந்துள்ளனர். அவர்கள் இந்தியாவில் தங்களுக்கு வழங்கப்பட்ட விசா விதிமுறைகளை மீறியுள்ளனர். டூரிஸ்ட் விசாவில் வருபர்கள் மதம் தொடர்பான நிகழ்வுகளில் கலந்துகொள்ளக் கூடாது என்பது விதிமுறை” என்றார்.

நிஜாமுதீன் ஜமாத்

இதனால் டூரிஸ்ட் விசா மூலம் வந்து இந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் கறுப்புப்பட்டியலில் வைக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது. அப்படி கறுப்புப்பட்டியலில் வைக்கப்பட்டால் அவர்கள் மீண்டும் இந்தியாவுக்குள் வர முடியாது. மேலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் வழக்குப் பதிய மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.