கூட்டுறவு நிறுவனங்களில் பயிர்க்கடன் பெற்றவர்கள், மாதத்தவணையை செலுத்த 3 மாதம் அவகாசம் அளிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 
 

 
இதுதொடர்பாக ம் முதல்வர் பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். வீட்டுவசதி கூட்டுறவுச் சங்கம்/வாரிய தவணைத்தொகை செலுத்துவதற்கும் 3 மாதம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
மீனவ கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கைத்தறி கூட்டுறவுச் சங்கங்களிலிருந்து கடன் பெற்றவர்கள் தவணைத் தொகையைச் செலுத்த 3 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் கடன் பெற்றுள்ள சிறு, குறு நிறுவனங்கள் கடன் தவணைகளைச் செலுத்தவும் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 
 
உள்ளாட்சி அமைப்புகளில் சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்த 3 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. லைசென்ஸ், எப்.சி புதுப்பிக்க ஜூன் 30 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 
image
 
 
image
 
image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.