சீனாவில் தொடங்கி தற்போது இந்தியாவிலும் கடுமையான பாதிப்புகளை விளைவித்துக் கொண்டிருக்கிறது, கோவிட்-19 நோய்த் தொற்று. இந்தியாவில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா எனப் பல்வேறு மாநிலங்கள் கொரோனாவின் பிடியில் சிக்கிப் போராடிவரும் நிலையில், கொரோனா பாதிப்பே இல்லாத சில மாநிலங்களும் இருக்கின்றன.

corona virus

அந்த வகையில், அஸ்ஸாம் மாநிலத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்படாத நிலையில், அங்கு கொரோனாவுக்குப் பயந்து, மலேரியா தடுப்பு மருந்தை உட்கொண்டு மருத்துவர் ஒருவர் இறந்துள்ளது, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஸ்ஸாம் மாநிலம் குவாஹாத்தி பகுதியிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் மயக்கவியல் மருத்துவராகப் பணிபுரிந்து வந்தவர் உத்பல்ஜித் பர்மன். 44 வயதான பர்மன், கடந்த சனிக்கிழமை அன்று எதிர்பாராதவிதமாக மாரடைப்பால் உயிரிழந்தார்.

மாரடைப்பு

மருத்துவர் பர்மன், முன்னதாக தனக்கு கொரோனா நோய்த்தொற்று இருக்கலாம் என்ற அச்சத்தில் மலேரியா நோய்க்குப் பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை அதிக அளவில் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால், எத்தனை நாள்களாக அந்த மலேரியா தடுப்பு மருந்தைப் பயன்படுத்தினார் என்பது தெரியவில்லை. இறக்கும் தறுவாயில் தனக்கு உடலளவில் ஏற்பட்ட பாதிப்புகளைத் தன் சக மருத்துவருக்கு வாட்ஸ்-அப் மூலம் தெரிவித்திருக்கிறார்.

Also Read: `அரசுக் கட்டுப்பாட்டுக்குள் வரும் தனியார் மருத்துவமனைகள்!’ – ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி அறிவிப்பு

இறந்த மருத்துவர் பர்மன் பயன்படுத்திய அந்த மலேரியா தடுப்பு மருந்தை, (ICMR) இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலே பரிந்துரைத்திருப்பதுதான் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

மலேரியா தடுப்பு மருந்து

மலேரியா தடுப்பு மருந்தை மருத்துவப் பணியாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு கொரோனா நோய்த்தொற்றுக்கான எதிர்ப்பு மருந்தாக அந்த அமைப்பு பரிந்துரைத்திருப்பது தெரியவந்துள்ளது.

மலேரியா நோய்க்குப் பயன்படுத்தப்படும் அந்த மருந்து, சீனாவில் கொரோனா நோய்க்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அந்த மருந்து, கொரோனா நோயை எதிர்த்துப் போராடும் திறன் கொண்டது என்று எந்த வகையிலும் நிரூபிக்கப்படாத நிலையில், அதை யாரும் முறையான மருத்துவப் பரிந்துரை இன்றி பயன்படுத்தக்கூடாதென்றும் ஐசிஎம்ஆர் எச்சரித்துள்ளது.

மாரடைப்பு

மருத்துவரின் மரணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சக மருத்துவர் ஒருவர், “மருத்துவரின் மாரடைப்பிற்கு அந்த மருந்துதான் முழுமையான காரணம் என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது. ஆனால், அவர் கடந்த சில நாள்களாக அதிக அளவில் அந்த மருந்தை உட்கொண்டதுதான் அவரின் இறப்புக்குக் காரணமாகியிருக்கலாம். அவர், தனக்கு கொரோனா நோய் தொற்றின் பாதிப்பு இருக்கலாம் என்ற பயத்தில்தான் அந்த மருந்தை உட்கொண்டுள்ளாரே தவிர உண்மையில் அவருக்கு நோய்த்தொற்று இல்லை” என்று சொல்லியிருக்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.