ஸ்பெயினில் ஒரே நாளில் 913 பேர் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 7,716 ஆக அதிகரித்துள்ளது.
உலக அளவில் கொரோனாவால் உயிரிழ்ந்தவர்களின் எண்ணிக்கை 37,780ஆக அதிகரித்துள்ளது. உலக அளவில் கொரோனாவால் 7ம்84,381 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 1,65,035 பேர் சிகிச்சைப்பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 32 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிகை 1,071லிருந்து 1,251 ஆக அதிகரித்துள்ளது.
144 தடையை மீறிய வாகன ஓட்டிகள்: இதுவரை ரூ.10 லட்சம் அபராதம் வசூல்!
இந்நிலையில், ஸ்பெயினில் ஒரே நாளில் 913 பேர் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 7,716 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் ஒரே நாளில் கொரோனாவுக்கு 812 பேர் இறந்ததால் இத்தாலியில் உயிரிழப்பு 11,591 ஆக அதிகரித்துள்ளது. பிரான்சில் ஒரே நாளில் 418 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 3,024 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா சமூக பரவல் தொடங்கிவிட்டதா?: சுகாதாரத்துறை விளக்கம்
41 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட ஈரானில் கொரோனா காரணமாக 2,757 பேர் உய்ரிழந்துளனர். அமெரிக்காவில் ஒரே நாளில் புதிதாக 19,988 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 1,63,479ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 565 பேர் உயிரிழந்ததால் அந்நாட்டில் பலி எண்ணிக்கை 3,148 ஆக அதிகரித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM