கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் முக்கியமான பங்கு, அதன் பரவலைத் தடுப்பதில்தான் உள்ளது. நோய் பாதிப்பு உள்ளவர்களைக் கண்காணிப்பது எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு கொரோனா பாதிப்பு இருக்க வாய்ப்பிருக்கிறது என தனிமைப்படுத்தப்பட்டவர்களைக் கண்காணிப்பதில்தான் அதிக கவனம் செலுத்தவேண்டிய சூழல் தற்போது நிலவுகிறது. இப்படி தனிமைப்படுத்தப்பட்டவர்களைக் கண்காணிக்க, பெருநகர சென்னை மாநகராட்சி புதிய முறையைக் கையாளத் தொடங்கவிருக்கிறது.

Gcc corona quarantine app | கொரோனா

பெருநகர சென்னை மாநகராட்சி, கொரோனா பாதிக்கக்கூடும் எனத் தனிமைப்படுத்தப்பட்டவர்களைக் கண்காணிக்க, `Gcc corona quarantine’ புதிய செயலி ஒன்றை வடிவமைத்துள்ளது. இந்த செயலியைக்கொண்டு, தனிமைப்படுத்தப்பட்டவர்களின் லொகேஷனை டிராக் செய்ய முடியும்.

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மட்டுமல்லாது கொரோனா அறிகுறி தங்களுக்கு இருப்பதாகத் தோன்றுபவர்களும் இந்தச் செயலியில் தங்கள் லொகேஷனையும் வீட்டின் புகைப்படத்தையும் அனுப்பலாம். இப்படி அனுப்பும்போது, குறுகிய ஒரே வட்டத்தை சுற்றி பலரும் அறிகுறிகளுடன் இருப்பதாக இருந்தால், அது உடனே மாநகராட்சி நிர்வாகத்துக்குத் தெரியவந்துவிடும்.

இது மட்டுமல்லாமல், ஓர் இடத்தில் மக்கள் கூட்டமாகக் கூடி சமூக இடைவெளியை (Social Distancing) கடைப்பிடிக்கத் தவறினால், அதையும் புகைப்படம் எடுத்து, அந்த செயலியில் பதிவிடலாம். அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கத்தக்க ஆட்களை சென்னை மாநகராட்சி அனுப்பிவைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: `டெல்லி நிஜாமுதீன் ஜமாத்.. கொரோனா `ஹாட்ஸ்பாட்’ ஆகும் தமிழகம்?!’ -அதிர்ச்சி தரும் டிராக் ஹிஸ்டரி

ஆண்ட்ராய்டு செயலியான இது, இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. எனினும், இப்போது தனிமைப்படுத்தப்பட்டவர்களைக் கண்காணிக்கச் செல்லும் பணியாளர்கள், அவர்களின் மொபைல்களில் இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்யச் சொல்லிவருகின்றனர். ஐபோனுக்கு இந்தச் செயலி கூடிய விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை, சென்னையில் மட்டும் சுமார் 21,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இது, பெருநகர சென்னை மாநகராட்சியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Press Release Karnatka

இதேபோன்று, கர்நாடகாவில் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது எனத் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், ஒவ்வொரு 1 மணி நேரத்திற்கு ஒருமுறையும் வீட்டில் இருந்தபடி செஃல்பி எடுத்து அனுப்ப வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். இரவு தூங்கும் நேரத்தை (இரவு 10-காலை 7 மணி) தவிர இதைத் தொடர்ந்து செய்ய வேண்டும். செல்ஃபி எடுத்து அனுப்புவதற்கும் பிரத்யேக செயலி ஒன்றை வெளியிட்டுள்ளது கர்நாடக அரசு. `இப்படி செல்ஃபி எடுத்து அனுப்ப தவறுபவர்கள், தனிமை முகாம்களுக்கு மாற்றப்படுவர்’ என்றும் தெரிவித்துள்ளது, கர்நாடக அரசு.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.