கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இருபது ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை திட்டமிட்டப்படி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில், வருகிற அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி இருபது ஓவர் உலகக்கோப்பை தொடர் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், கொரோனா முன்னெச்சரிக்கையாக, ஆறு மாதங்களுக்கு வெளிநாட்டவர் வர ஆஸ்திரேலிய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
ரத்தாகிறதா இந்தாண்டு ஐபிஎல் போட்டித் தொடர் ?
இந்தத் தடை தொடரும் பட்சத்தில், ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கும் இருபது ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெறுவதில் பெரும் சிக்கல் உருவாகும் எனக் கூறப்படுகிறது. அடுத்தாண்டு இந்தியாவில் மற்றுமொரு உலகக்கோப்பை இருபது ஓவர் தொடர் நடைபெறவுள்ளதால், நடப்பாண்டு தொடர் தள்ளி வைக்கப்பட வாய்ப்பில்லை எனவும் தெரிகிறது.
“தோனி கிரிக்கெட்டின் அடுத்தக் கட்டத்துக்கு தயாராகிறார்” பிராட் ஹாக் கணிப்பு
இதனிடையே, ஆஸ்திரேலியாவில் உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக, இந்தியா பங்கேற்கும் டெஸ்ட் தொடரும் ரத்தாகும் சூழல் உருவாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் 2000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 16 போ் உயிரிழந்துள்ளனா். இந்நிலையில் பயணத்தடை, எல்லைகளுக்கு சீல் வைத்தல் போன்றவற்றை 6 மாதங்களுக்கு நடைமுறைப்படுத்தியுள்ளது ஆஸ்திரேலிய அரசு.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM