இந்த வார ராசிபலன் மார்ச் 30 முதல் ஏப்ரல் 5 வரை மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் அதிர்ஷ்டக் குறிப்புகள் மற்றும் எளிய பரிகாரங்களுடன் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிட மாமணி’ கிருஷ்ணதுளசி.

மேஷராசி அன்பர்களே!

இந்த வாரம் எதிலும் சற்று பொறுமையுடன் சிந்தித்துச் செயல்பட வேண்டும். தொலைதூரத்தில் இருந்து கிடைக்கும் செய்தி சற்று சஞ்சலப்படுத்தும் என்றாலும் பாதிப்பு இருக்காது. மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாக கணவன் மனைவிக்கி டையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். தாய்வழி உறவினர்களுடன் சுமுகமான உறவை ஏற்படுத்திக் கொள்வது அவசியம். தந்தைவழியில் திடீர் செலவுகளுக்கு வாய்ப்பு உண்டு.

அலுவலகப் பணிகள் அதிகரிக்கும். பணிகளை முடிப்பதில் சில தடைகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டியது அவசியம்.

வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்காது. போட்டிகளைச் சமாளிக்க கடுமையாக உழைக்கவேண்டி வரும். புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம். செலவுகளைச் சமாளிக்கத் தேவையான பணம் கிடைக்கும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 31, ஏப்: 1

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு

சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு

பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு

சித்தி தருவது நீறு திருவாலவாயான் திருநீறே

ரிஷபராசி அன்பர்களே!

பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். ஆனால், எதிர்பாராத செலவு களும் ஏற்படக்கூடும் என்பதால் சிறிது கடன் வாங்கவும் நேரிடும். பணியின் காரணமாகப் பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேரும் வாய்ப்பு ஏற்படும். கடன்கள் விஷயத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. இளைய சகோதரர்களால் உதவி உண்டு. பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் செலவுகளும் அலைச்சலும் ஏற்படும்.

சக ஊழியர்களுக்கு பணிகளை முடிப்பதில் ஏற்படக்கூடிய சிற்சில தடைகளின் காரணமாக, அவர் களின் பணிகளையும் நீங்களே சேர்த்துப் பார்க்கவேண்டி வரும். அதன் காரணமாக சற்று அசதி ஏற்படக்கூடும்.

வியாபாரத்தில் புதிய முதலீடுகள் வேண்டாம். சக வியாபாரிகளின் பேச்சைக் கேட்டு புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். பங்குதாரர்களின் ஆதரவு மனதுக்கு ஆறுதலாக இருக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு கூடுதல் பொறுப்புகளின் காரணமாக சற்று சோர்வு ஏற்பட்டாலும் கணவரின் அன்பும் உற்சாகம் தரும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தருவதாக இருக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 30, ஏப்: 3, 4, 5

அதிர்ஷ்ட எண்கள்: 4, 7

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி

பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

செறிகழலுந் திருவடியுந் தோன்றுந் தோன்றும் திரிபுரத்தை எரிசெய்த சிலையும் தோன்றும்

நெறியதனை விரித்துரைத்த நேர்மை தோன்றும் நெற்றிமேல் கண்தோன்றும் பெற்றம் தோன்றும்

மறுபிறவி அறுத்தருளும் வகையும் தோன்றும் மலைமகளும் சலமகளும் மலிந்து தோன்றும்

பொறியரவும் இளமதியும் பொலிந்து தோன்றும் பொழில்திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே

மிதுனராசி அன்பர்களே!

வருமானம் திருப்தி தருவதாக இருக்கும். திருமண முயற்சிகள் சாதக மாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வழக்குகளில் இருந்து வந்த பிற்போக்கான நிலை மாறும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். தாயாரின் உடல்நலனில் அக்கறை எடுத்துக்கொள்வது அவசியம். அரசாங்கக் காரியங்கள் முடிவதில் இழுபறியான நிலையே காணப்படுகிறது.

பணிச்சுமை குறைவதால் உற்சாகமாக இருப்பீர்கள். அதிகாரி மூலம் நல்ல தகவல் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. தடைப்பட்ட சலுகை கிடைக்கும்.

வியாபாரத்தை விரிவுபடுத்த நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளைத் தொடங்கலாம். அனுகூலமாக முடியும். சக வியாபாரிகளுடன் இணக்கமான உறவு ஏற்படும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகள் கூடுவதால் சற்று சிரமப்பட்டே சமாளிக்க வேண்டி வரும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சலுகைகள் எதையும் எதிர்பார்க்கமுடியாது.

அதிர்ஷ்ட நாள்கள்: 31, ஏப்: 1, 5

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

வழிபடவேண்டிய தெய்வம்: முருகன்

பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்

கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

கடகராசி அன்பர்களே!

பணவரவுக்குக் குறைவில்லை. அவசியத் தேவை என்றாலும்கூட இப்போது கடன் வாங்குவதைத் தவிர்த்துவிடுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பால்ய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியும் ஆறுதலும் தருவதாக இருக்கும். வாழ்க்கைத்துணையுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். அரசாங்கக் காரியங்கள் இழுபறி யாகி முடியும்.

அலுவலகப் பணிகள் அதிகரிக்கும். இருந்தாலும் பணிகளை முடிப்பதற்கேற்ற அவகாசமும் சலுகையும் கிடைப்பதால் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள்.

வியாபாரத்தை விரிவுபடுத்தவும், வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்குக் கடையை மாற்றவும் வாய்ப்பு உண்டாகும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ளவும். அலுவலகம் செல்பவர்களுக்கு திருப்தி தரும் வாரம். சலுகைகளும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 30, ஏப்: 1, 2, 5

அதிர்ஷ்ட எண்கள்:4, 9

வழிபடவேண்டிய தெய்வம்: வேங்கடேச பெருமாள்

பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

ஆனாதசெல்வத்து அரம்பையர்கள் தற்சூழ

வானாளும்செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்

தேனார்பூஞ்சோலைத் திருவேங்கடச்சுனையில்

மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே

சிம்மராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். திருமண வயதில் உள்ள பிள்ளை அல்லது பெண்ணுக்கு வரன் தேடும் முயற்சியில் ஈடுபட லாம். நல்ல வரன் அமை வதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும் என்றாலும் உடனே சரியாகிவிடும். சிலருக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

அலுவலகம் தொடர்பான விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டாம். பணிக ளிலும் கூடுதல் கவனம் தேவை. சலுகைகள் கிடைப்பது தாமதமாகும்.

வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்றாலும் ஓரளவு திருப்திகரமாக இருக்கும். கடையை விரிவுபடுத்த நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனதில் அவ்வப்போது லேசான சோர்வு ஏற்படக்கூடும். அலுவலகம் செல்லும் பெண்களுக்கு சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

அதிர்ஷ்ட நாள்கள்: 30, 31, ஏப்: 1, 5

அதிர்ஷ்ட எண்கள்: 1, 7

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பாள்

பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்கண்ட பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

ஆனந்தமாய், என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,

வான் அந்தமான வடிவு உடையாள், மறை நான்கினுக்கும்

தான் அந்தமான, சரணாரவிந்தம்-தவள நிறக்

கானந தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக் கண்ணியதே

கன்னிராசி அன்பர்களே!

பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருப்பதாலும், தேவை யற்ற செலவுகள் இல்லை என்பதாலும் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். கண வன் -மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறிதளவு பாதித்தா லும் உடனே சரியாகிவிடும். சிலருக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. வாரத் தொடக்கத்தில் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். அதிகாரியின் ஆலோசனை உங்கள் பணியில் ஏற்பட்ட சந்தேகங்களை நிவர்த்தி செய்வதாக இருக்கும். சலுகை கிடைக்கும்.

வியாபாரத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். சக வியாபாரிகளுடன் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சந்தோஷமும் நிம்மதியும் தரும் வாரம். வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 31, ஏப்: 1, 2, 4

அதிர்ஷ்ட எண்கள்:2, 6

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்.

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

மன்னே மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னைப்

பொன்னே மணிதானே வயிரமே பொருதுந்தி

மின்னார் பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட்டுறையுள்

அன்னே உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே

துலாராசி அன்பர்களே!

தேவையான அளவுக்கு பணவரவு இருப்பதால் செலவுகளைச் சமாளிப் பதில் சிரமம் எதுவும் இருக்காது. கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படக் கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. தந்தையுடன் ஏற்பட்டி ருந்த மனஸ்தாபம் நீங்கி, அவருடன் சுமுகமான உறவு ஏற்படும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.

உங்கள் பணிகளைக் குறித்த நேரத்தில் முடிப்பதற்கு சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். அதிகாரி களிடம் பேசும்போது பதற்றம் தவிர்க்கவும்.

வியாபாரத்தில் சிற்சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்றாலும், அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. வாடிக்கையாளர்களிடம் கனிவாக நடந்துகொள்ளவும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கவும், அதன் காரணமாக அசதியும் சோர்வும் ஏற்படவும் கூடும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: ஏப்: 2, 3, 4, 5

அதிர்ஷ்ட எண்கள்: 3, 7

சந்திராஷ்டம நாள்: 30

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறு அங்கம் முதற் கற்ற கேள்வி

வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு அப்பாலாய்

எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்தபடி இருந்து காட்டிச்

சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்

விருச்சிகராசி அன்பர்களே!

பொருளாதார வசதி சுமாராகத்தான் இருக்கும். ஆனாலும், செலவு களும் குறைவாகவே இருக்கும் என்பதால் பிரச்னை எதுவும் இல்லை. உறவினர் களுடன் வீண் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பம் தொடர்பான எந்த ஒரு முடிவையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. சிலருக்குக் குடும்ப விஷயமாக முக்கிய முடிவு ஒன்றை எடுக்க நேரிடும்.

பணிகளில் அலட்சியம் வேண்டாம். சிறு தவறும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்திவிடும் என்பதால் மிகுந்த கவனமாக இருக்கவும்.

வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். சிலர் வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்கு கடையை மாற்றி விரிவுபடுத்துவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் கூடுதல் வேலை செய்யவேண்டி இருக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 30, ஏப்: 5

அதிர்ஷ்ட எண்கள்: 2, 4

சந்திராஷ்டம நாள்கள்: மார்ச்: 31, ஏப்: 1

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

உருவலர் பவளமேனி ஒளிநீ றணிந்து உமையோடும் வெள்ளை விடைமேன்

முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்

திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வ மானபலவும்

அருநெறி நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.

தனுசுராசி அன்பர்களே!

பணவரவுக்கு குறைவிருக்காது. குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவ தாக இருக்கும். சகோதர வகையில் இருந்து வந்த சச்சரவுகள் மறைந்து சுமுகமான உறவு உண் டாகும். நீதிமன்றத்தில் வழக்குகள் இருந்தால், சாதகமாக முடியும். கணவன் – மனைவிக்கி டையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

அலுவலகம் தொடர்பான பணிகளுக்காக சிலருக்கு வெளியில் செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்படும். தகுந்த முன்னெச்சரிக்கையுடன் செல்வது அவசியம்.

வியாபாரத்தில் சற்று கூடுதலாக உழைக்கவேண்டி வரும். பற்று வரவு சுமுகமாக நடக்கும். பணி யாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பங்குதாரர்களும் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு பிரச்னை இல்லாத வாரம். புகுந்தவீட்டு உறவினர்கள் அனுசரணையாக இருப்பார்கள். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்ப்புகள் ஓரளவு நிறைவேறும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 30, 31, ஏப்: 1

அதிர்ஷ்ட எண்கள்: 1,5

சந்திராஷ்டம நாள்கள்: ஏப்: 2, 3, 4

வழிபடவேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர்

பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை பாராயணம் செய்யவும்.

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி

அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைகண்டு ; அயலான் ஊரில

அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்து காப்பான்

மகரராசி அன்பர்களே!

எதிர்பார்த்ததை விட பணவரவு அதிகமாக இருக்கும். தேவையற்ற செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. வராது என்று நினைத்த கடன் வந்து சேரும். உடல் நலன் சிறிய அளவில் பாதிக்கப்படும். திருமண முயற்சிகள் சற்று இழுபறிக்குப் பின்னர் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. அதிகாரிகளால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.

அலுவலகத்தில் ஏற்படக்கூடிய முக்கியமான ஒரு பிரச்னைக்கு உங்களுடைய அனுபவ அறிவு பயன்படும் எதிர்பாராத சலுகைகள் கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு.

வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.பணியாளர்கள் நல்ல முறையில் பணி செய்வார்கள். சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உற்சாகமான வாரம். செலவுகளைச் சமாளிக்கத் தேவை யான பணம் இருப்பதால் பிரச்னை எதுவும் ஏற்படாது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை திருப்தி தருவதாக இருக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 31 ஏப்: 1, 2, 3, 4

அதிர்ஷ்ட எண்கள்: 2,7

சந்திராஷ்டம நாள்: ஏப்: 5

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

பரிகாரம்: தினமும் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈச னெந்தை யிணையடி நீழலே.

கும்பராசி அன்பர்களே!

பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். பிள்ளைகளால் மதிப்பும் மரியாதையும் கூடும். வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சி உண்டாகும். உடன்பிறந்தவர் களின் வருகை மனதுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தடைப்பட்டு வந்த சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான சூழ்நிலை கனிந்து வரும். அரசாங்க வகையில் தேவையற்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கவனமாக இருக்கவும்.

அலுவலகப் பணிகளைக் குறித்த நேரத்துக்குள் முடித்துவிடுவீர்கள். எதிர்பார்த்த பண உதவி கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும்.

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக வியாபாரிகளுடன் சுமுகமான போக்கு ஏற்படும். பங்கு தாரர்கள் அனுசரணையாக இருப்பார்கள். கடன் வாங்கி முதலீடு செய்வதைத் தவிர்க்கவும்.

குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு உற்சாகமான வாரமாக இருக்கும். உறவினர் களால் ஆதாயம் உண்டாகும். அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.

அதிர்ஷ்ட நாள்கள்: ஏப்: 2, 3, 4

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

வழிபடவேண்டிய தெய்வம்: துர்கை

பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

உறைகின்ற நின் திருக்கோயில்-நின் கேள்வர் ஒரு பக்கமோ,

அறைகின்ற நான் மறையின் அடியோ முடியோ, அமுதம்

நிறைகின்ற வெண் திங்களோ, கஞ்சமோ, எந்தன் நெஞ்சகமோ,

மறைகின்ற வாரிதியோ?- பூரணாசல மங்கலையே

மீனராசி அன்பர்களே!

பல வகைகளிலும் அனுகூலமான வாரம். பணவரவு திருப்தி தரும். வீண்செலவுகளும் ஏற்படுவதற்கில்லை. நண்பர்கள் உதவி செய்வார்கள். தந்தைவழி உறவி னர்களால் ஆதாயம் உண்டாகும். வழக்குகளில் பொறுமை அவசியம். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்லவும். சிலருக்கு நண்பர்கள் மூலம் ஆதாயம் பெறக்கூடிய வாய்ப்பு ஏற்படும். நீண்டநாளாக எதிர்பார்த்திருந்த சுபச் செய்தி கிடைக்கக்கூடும்.

வேலையைப் பொறுத்தவரை அதிகப்படியான பொறுப்புகளின் காரணமாக சற்று சோர்வு ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். நிர்வாகத்தினரின் பாராட்டுகள் உற்சாகம் தரும்..

வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகமாக வரும் என்றாலும் அதற்காக மிகவும் உழைக்கவேண்டி இருக்கும். வங்கிக் கடனுதவி கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனதுக்கு நிம்மதி உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சலுகைகளும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 30, ஏப்: 5

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

வழிபடவேண்டிய தெய்வம்: லட்சுமி நரசிம்மர்

பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

மிக்கானை மறையாய்விரிந்த விளக்கை என்னுள்

புக்கானைப் புகழ்சேர் பொலிகின்றபொன்மலையை

தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த

அக்காரக்கனியை அடைந்து உய்ந்துபோனேனே

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.