இந்தியாவைப் பொறுத்தவரையில் கொரோனா வைரஸ் தொற்று சமூகப் பரவலாக இல்லை. ஒருவருக்கொருவர் என்ற அளவில்தான் இருக்கிறது என மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். இந்தியாவில் கொரோனா தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் கடந்த 24 மணி நேரம் நிலவரம் குறித்து விளக்கமளித்தனர்.

கொரோனா

“இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 92 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. நான்கு மரணங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரையில் 1071 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 29 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. நாம் பீதியடைய வேண்டிய தேவையில்லை. ஆனால் நமக்கு விழிப்புணர்வு என்பது மிகவும் அவசியம். சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும். நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

Also Read: 3 மணிநேரத்தில் கொரோனாவை கண்டுபிடிக்கும் கருவி.. `ரியல் ஷீரோ’வான இந்தியப் பெண் மினல் போஸ்லே

ஊரடங்கு உத்தரவுகளை மக்கள் மதித்து நடக்கவேண்டும். கொரோனா தொற்றுள்ள ஒருவரால் 100 நபர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்த முடியும். ஒருவர் நமக்கு ஒத்துழைப்பு வழங்கத் தவறினாலும் அதுதோல்வியில் முடிந்துவிடும். தற்போதுள்ள இந்த சுகாதாரப் பிரச்னையில் வயதானவர்கள் அனைவரும் இந்த ஊரடங்கு உத்தரவைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

லாவ் அகர்வால்

இந்தியாவைப் பொறுத்தவரையில் கொரோனா வைரஸ் தொற்று சமூகப் பரவலாக இல்லை. ஒருவருக்கொருவர் என்ற அளவில்தான் இருக்கிறது. ஊரடங்கு உத்தரவால் அவதியுறும் தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் உள்துறை அமைச்சகம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதலாளிகள் அவர்களிடம் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்றும் வீட்டு உரிமையாளர்கள் வீட்டு வாடகை கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது” என மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உத்தரப்பிரதேசம்

Also Read: `ரசாயன திரவத்தால் மக்களைக் குளிப்பாட்டுவதா?’ – பரேலி வீடியோவால் கொதித்த பிரியங்கா #corona

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் வேறு மாநிலத்திலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்லும் தொழிலாளர்கள் மீது ரசாயனம் கலந்த தண்ணீர் தெளிக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அதிகாரிகள், “அங்கு பணிபுரியும் ஊழியர்களின் அறியாமை காரணமாக மக்களிடம் அவர்கள் இவ்வாறு நடந்துகொண்டனர் என மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்துள்ளார். இந்தச் செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்தார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.