வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் ‘கொரோனா’ பரவலைக் கட்டுப்படுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. வேலூர் மாவட்டத்துக்கான ‘கொரோனா’ மருத்துவமனையாக பில்டர்பெட் சாலையில் உள்ள ‘பென்ட்லேன்ட்’ மருத்துவமனை அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாநகர்

பாதிக்கப்பட்ட நபர்களுக்குச் சிகிச்சை அளிக்க மூன்று மாவட்டங்களிலும் படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. குறிப்பாக, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் ‘கொரோனா’ பரிசோதனை மையம் அமைக்கப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது.

Also Read: `நாளை முதல் கொரோனா பரிசோதனை!’ – ஏழை மக்களுக்காக இரங்கும் வேலூர் சி.எம்.சி #corona

வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்திருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்றைய நிலவரப்படி, வேலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 900 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல், திருப்பத்தூர் மாவட்டத்தில் 693 பேரும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 600 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

காட்பாடி

இவர்களின் வீடுகளில், சிவப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட இந்த நபர்களும் அவர்களின் குடும்பத்தினரும் வீடுகளிலிருந்து வெளியில் வரக்கூடாது என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இவர்களைக் கண்காணிக்க மூன்று மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட்டுவருகிறது.

இந்த நிலையில், அணைக்கட்டு தாலுகா ஓங்கப்பாடி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ‘கொரோனா’ தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு போன் வந்தது. சுகாதாரத் துறை அதிகாரிகள், அந்த கிராமத்துக்கு விரைந்து சென்று காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் குறித்து விசாரணை நடத்தினர்.

வேலூர் கலெக்டர் அலுவலகப் பகுதி

குறிப்பிட்ட அந்த நபர் மதுரையில் இருப்பதாக ஊர் மக்கள் கூறினர். அதன் பிறகே, கட்டுப்பாட்டு அறைக்குத் தவறான தகவல் கொடுத்திருப்பது தெரியவந்தது. தவறான தகவல் கொடுத்த நபர் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர் வேப்பங்குப்பம் காவல் நிலைய போலீஸார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.