திருப்பூரில் பிரவச வலியால் தவித்த பெண்ணை காவல்துறையினர் தங்கள் வாகனத்தில் ஏற்றிச் சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்.
திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு, திடீரென பிரசவ வலி வந்தது. இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ்க்கு உறவினர்கள் தகவல் கொடுத்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் வர காலதாமதம் ஏற்பட்டது. இதனால் மகேஸ்வரியின் குடும்பத்தினர் செய்தவறியாது தவித்தனர்.
அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வீரபாண்டி காவல்நிலைய ஆய்வாளர் கணபதி தகவல் அறிந்து மகேஸ்வரியின் வீட்டிற்கு வந்தார். அவரது ஜீப்பில் உதவி ஆய்வாளர் கலாவதி, காவலர் சதீஷ் ஆகியோரின் உதவியுடன் மகேஸ்வரியை ஏற்றினார்.
பின்னர் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அவர்களை அனுப்பி வைத்தார். காவல்துறையினர் இந்த செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினார்.
‘இந்த நேரத்திலும் தனியார் பள்ளிகள் கட்டணம் செலுத்த சொல்கிறார்கள்..’: கர்நாடக மக்கள் வேதனை
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM