சமூக வலைத்தளமான ட்விட்டரில் இன்று திடீரென #Pray_For_samuthirakani என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது.

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவினால் மக்கள் முடங்கியுள்ளனர். இந்த மக்களில் அன்றாடம் ட்ரெண்டிங்களை உருவாக்கும் நெட்டிசன்களும் அடக்கம். அந்த வகையில் தற்போது சமூக வலைத்தளங்களில் கொரோனா வைரஸையும், ஊரடங்கு உத்தரவையும் நெட்டிசன்கள் மீம்ஸ்கள் போட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று எந்தவித சம்பந்தமும் இல்லாமல் நடிகர் சமுத்திரகனி ட்ரெண்ட் செய்யப்பட்டார்.

image

அதுவும் #Pray_For_Nesamani என்ற பாணியில் #Pray_For_samuthirakani என நெட்டிசன்கள் மீம்ஸ்களை போட்டு ட்ரெண்ட் செய்தனர். இதில், சமுத்திரகனியின் பெயரை பல விதத்தில் சித்தரித்தும், பலரது உருவத்துடன் அவரது உருவத்தை பொருத்தியும் ட்ரோல் செய்தனர்.

image

எதனால் இப்படி ட்ரெண்ட் செய்கின்றனர் ? என பல நெட்டிசன்கள் கேள்விகளையும் எழுப்பியிருந்தனர். ஆனால், இதற்கான காரணமாக ஒரு மீம்ஸ் தான் கூறப்படுகிறது. ஊரடங்கு நேரத்தில் ஒரு இளைஞர் போலீஸாரிடம் சிக்கிக்கொள்ள, அந்த புகைப்படத்தில் சமுத்திரகனி பைக்கில் செல்லும் படத்தை போட்டோ ஷாப் செய்து ஒரு மீம்ஸை பகிர்ந்துள்ளனர். அந்த மீம்ஸ் மூலமே #Pray_For_samuthirakani என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகியதாக தெரிகிறது. கடந்த வருடம் #Pray_For_Nesamani என்ற வடிவேலுவின் திரைப்பட கதாபாத்திரம் உலக அளவில் ட்ரெண்டாகியது குறிப்பிடத்தக்கது.

‘கொரோனா அச்சம் எங்களை வாட்டுகிறது’: கோவாவில் தவிக்கும் தமிழக மீன்பிடி தொழிலாளர்கள்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.