கொரோனா வைரஸ், உலக மக்களிடையே கொடூரமான போரை தொடுத்துக்கொண்டிருக்கிறது. உலகம் முழுவதிலும் சுமார் ஏழு லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, ஏறத்தாழ 35,000 மக்கள் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் பலதரப்பு மக்கள் அரசுகளோடு கரம் கோத்து, இந்தப் பெரும் போரை முறியடிக்கத் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்துவருகிறார்கள்.

கொரோனா வைரஸ்

கொரோனா தொற்று ஏற்படாமல் தற்காத்துக்கொள்ளத் தேவைப்படும் மாஸ்க்குகளுக்கு உலகம் முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல உலக நாடுகளில் மாஸ்க்குகள் தயாரிப்பதற்குத் தேவையான மூலப் பொருள்களுக்கே தட்டுப்பாடு நிலவுகிறது.

இந்நிலையில், தங்கள் நாட்டின் மீதுள்ள தேசப் பற்றால், வடக்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவின் பெண்கள் படை, மாஸ்க் தயாரிப்பில் களம் கண்டு 50,000 மாஸ்க்குகளைத் தினமும் உற்பத்தி செய்வதோடு, இன்னும் பிற மருத்துவ உபகரணங்களையும் உற்பத்திசெய்துவருகிறது.

மாஸ்க் உற்பத்தியில் ஈடுபட்டுவரும் துனிசிய தொழிற்சாலையின் மேலாளரான ஹம்ஸா அலூனி, பெரும்பான்மையான பெண்கள் உட்பட150 பேர் மாஸ்க் தயாரிப்பில் ஈடுபட்டுவருவதாக பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.

corona virus

ஒரு மாத காலமாகத் தங்கள் குடும்பங்களைப் பிரிந்து, தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டு, உயிர் காக்கும் உபகரணங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள் இப்பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தயாரிப்பு நிர்வாகியான கவ்லா ரெபி, ‘என் குடும்பத்தைப் பிரிந்து பெரிதும் வாடுகிறேன். இருந்தாலும், உடனிருக்கும் சக பணியாளர்களின் உற்சாகத்தாலும், என் கணவர் மற்றும் 16 வயதான மகளின் ஒத்துழைப்பாலும் புத்துணர்வுடன் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருக்கிறேன்’ என்றிருக்கிறார்.

Also Read: `அவர்களுக்கு எங்களால் செலவு செய்ய முடியாது’ – ஹாரி, மேகனை நிராகரித்த ட்ரம்ப்

தொழிற்சாலையில் பணியாற்றிக்கொண்டிருக்கும் பெண்களுக்கு மன உளைச்சல் ஏற்படாத வகையில் விளையாட்டுத் திடல்கள், கேளிக்கை அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மேலும், ஆண்களுக்கென தனி விளையாட்டு அரங்கங்கள் உள்ளன. ‘எங்கள் குடும்பத்துடன் வீடியோ காலில் பேச இணைய வசதி ஏற்படுத்தித் தரப்பட்டிருக்கிறது. நாங்கள், எட்டு மணி நேரம் கொண்ட இரண்டு ஷிஃப்ட்டுகளில் மாறிமாறி பணியாற்றிக்கொண்டிருக்கிறோம்’ என்கிறார்கள் இப்பெண்கள்.

மாஸ்க்

மேலாளர் அலூனி, ‘தனிமைப்படுத்தலின் எட்டாவது நாளுக்குப் பிறகும் எங்கள் எல்லோரிடமும் பாசிட்டிவிட்டி இருக்கிறது. ‘நமக்கு வைரஸ் பாதிப்பு இருந்தால், உயிர் காக்கும் மருத்துவர்களுக்குத் தேவையான மாஸ்க் தயாரிப்பில் ஈடுபட்டிருக்க முடியாது’ என்று தனிமைப்படுத்தலின் முக்கியத்துவம் உணர்ந்து, முழு மனதுடன் பணியாற்றுகிறோம்’ என்கிறார்.

இந்த மாஸ்க் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் சம்பந்தப்பட்ட நிறுவனம், பிற நாடுகளுக்கு முன்னர் ஏற்றுமதி செய்திருந்தாலும், தற்போது உள்நாட்டுத் தேவையின் முக்கியத்துவத்தைக் கருதி ஏற்றுமதி செய்யவில்லை எனத் தெரிவித்திருக்கிறது. மேலும், ஊழியர்களின் மருத்துவத் தேவைகளுக்காக ஒரு மருத்துவரையும், சமையல் பணியாளர்களையும் தொழிற்சாலையில் பணியமர்த்தி இருப்பதாக தொழிற்சாலை நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

mask

துனிசியாவில் தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு எட்டு நாள்கள் ஆகியுள்ள நிலையில், அங்கு கொரோனா வைரஸ் தொற்றால் 227 பேர் பாதிக்கப்பட்டும், 6 பேர் உயிரிழந்தும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.