துரிதமாக செயல்பட்டிருந்தால் கொரோனா பரவுவதை தடுத்திருக்கலாம் என்று சீனாவில் முதன் முதலில் பாதிக்கப்பட்ட நபர்களில் ஒருவர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று இன்று உலக நாடுகளை கடுமையாக அச்சுறுந்தி வருகிறது. சீனாவில் பரவத்தொடங்கிய இந்த கொரோனா தொற்றுக்கு உலகம் முழுவதும் இது வரை 7,23,732 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 34,000 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் பல நாடுகள் கொரோனா குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன. குறிப்பாக சீனா மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. இந்நிலையில், சீனாவில் முதன்முதலாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட இறால் விற்பனையாளர் கிக்ஸியன் தற்போது பூரணமாக குணமாகி இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார்.

 “வீட்டு வாடகைதாரர்களின் பிரச்னை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்” – முதல்வர் பழனிசாமி

image

57 வயதான கிக்ஸியன் கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி ஹூகான் மகாணத்தில் கடல் உணவு சந்தையில் எப்போதும் போல இறால்களை விற்றுக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு சளி இருந்ததாக தெரிகிறது. இதனையடுத்து, கிக்ஸியன் அங்குள்ள ஒரு சிறிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு அவருக்கு ஊசிப் போடப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த சிகிச்சை அவரை குணப்படுத்தவில்லை.

தொடர்ந்து கடுமையான உடல்வலியால் அவதியுற்ற கிக்ஸியன் ஹூகான் நகரில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு சென்றும் அவருக்கு குணமாகவில்லை, தொடர்ந்து சோம்பல் உணர்ச்சியானது நீடித்து கொண்டிருந்ததாக தெரிகிறது. இதனையடுத்து கிக்ஸியன் ஹூகான் நகரில் உள்ள நவீன மருத்துவ வசதிகள் அடங்கிய மருத்துவமனைக்கு டிசம்பர் 16 ஆம் தேதி சென்றுள்ளார்.

ஊரடங்கு உத்தரவால் தவித்த இளைஞர்கள் – உடனடியாக உதவி செய்த கோவை போலீஸ்

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் நோய் குறித்த வீரியத்தை அவரிடம் கூறியுள்ளனர். அதன் பின்னர் அதே அறிகுறியுடன் அதே சந்தையில் இருந்து பலர் வந்து
பரிசோதனை செய்துள்ளனர். இதனையடுத்து கொரோனா வைரஸ் பாதிப்பை, கடல் உணவுகளுடன் இணைத்து ஆராய்ச்சி நடந்த போது, கிக்ஸியன் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து ஹூகான் நகரில் உள்ள கடல் உணவு சந்தையும் மூடப்பட்டது.

image

நீண்ட சிகிச்சைக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் கிக்ஸியன் தனது இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கிறார். இந்த நோய் தொற்றானது சந்தையில் உள்ள கழிவறையில் இருந்து பரவியதாக, சக விற்பனையாளர்களுடன் அவர் பகிர்ந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. அதன் பின்னர் அதே மருத்துவமனையில் 27 பேருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 24 பேர் கடல் உணவு சந்தையில் இருந்து வந்தது உறுதிசெய்யப்பட்டது.

இது குறித்து கிக்ஸியன் கூறும் போது “ தனக்கு கொரோனா தொற்று இருப்பதைக் கண்டறிந்த, சீன அரசு உடனடியாக மக்களின் தனிமைப்படுத்துதலில் கவனம் செலுத்தியிருந்தால் நிச்சயம் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தி இருக்கலாம்” எனக் கூறினார். ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபர் கிக்ஸியன் இல்லை என்றும் முதல் நபர் டிசம்பர் 1 ஆம் தேதியை கண்டறியபட்டு விட்டார் என்றும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.