இதுவரை கொரோனா சோதனை செய்யப்பட்ட 743 பேர்களில் மொத்தம் 608 பேருக்கு நோய்க்கான தாக்கம் இல்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் அதன் தாக்கத்தைக் குறைப்பதற்காக மக்கள் நடமாட்டத்தை முற்றிலும் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் அரசு இறங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு மாநிலம் முழுவதும் நடைமுறைக்கு வர உள்ளது. முன்னதாக கொரோனாவுக்கு தமிழகத்தில் 12 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 3 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
அனைத்து ஏடிஎம்களிலும் சேவை கட்டணமின்றி பணம் எடுக்கலாம்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
இது குறித்து அவரது பதிவில் “ சென்னையில் மேலும் மூன்று நபர்களுக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மூவருமே வெளிநாடு சென்று திரும்பியவர்கள்தான். இருவர் அமெரிக்காவிலிருந்து திரும்பியவர்கள். ஒருவர் சுவிட்சர்லாந்திலிருந்து திரும்பியவர். மூவருக்குமே மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது சில விவரங்களை அமைச்சர் விஜயபாஸ்கர் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்தப் பதிவில், இதுவரை கொரோனா பாதிப்புக்காகச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,09,163 ஆக உள்ளதாகக் கூறியுள்ளார். மேலும், கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 15,298 ஆக இருப்பதாகவும் கூறியுள்ள அவர், மொத்தம் 9154 பேர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் உள்ளதாகவும் அதில் தற்போது 116 பேர் புதியதாகச் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
“வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூன் 30 வரை அவகாசம்” நிர்மலா சீதாராமன்
மேலும் இதுவரை கொரோனா நோய்க்கான மாதிரிகளை எடுத்துச் சோதிக்கப்பட்ட 743 பேர்களில் மொத்தம் 608 பேருக்கு நோய்க்கான தாக்கம் இல்லை என்பதும் அதில் 15 பேருக்கு மட்டுமே பாசிடிவ் என மருத்துவ அறிக்கை வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், அதில் இன்னும் 120 பேருக்கான சோதனை நடந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM