தமிழகத்தில் ஒரே நாளில் 17 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

image

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி ” தமிழகத்தில் ஒரே நாளில் புதிதாக 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 67 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் 5 பேர் பூரண சிகிச்சைப் பெற்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார்.” எனத் தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.