இந்திய கிரிக்கெட் வீரர் ஜோகிந்தர் சர்மாவை நினைவிருக்கிறதா ? தோனி தலைமையில் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றவர். இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல காரணமாக இருந்தவர் ஜோகிந்தர் சர்மா என்று சொன்னாலும் அது மிகையலல்ல.

image

கடந்த 2007 இல் நடந்த டி-20 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதியது இந்தியா. கடைசி ஓவரில் 11 ரன்கள் எடுத்தால் பாகிஸ்தான் வெற்றி என்ற நிலையில் அந்த ஓவரை வீசினார் ஜோகிந்தர் சர்மா. அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் பாகிஸ்தானின் மிஸ்பா அவுட்டாக இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பை வென்று சாதித்தது.

“ரூ.30 லட்சம் சம்பாதித்தால் போதும்” தோனியின் அன்றைய லட்சியம் ! 

image

அதன் பின்பு இந்திய அணிக்காக விளையாடிய ஜோகிந்தர் சர்மா, சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வுப் பெற்றார். இப்போது ஹரியானா மாநில காவல்துறையில் போலீஸ் டிஎஸ்பியாக பணியாற்றி வருகிறார் ஜோகிந்தர் சர்மா. கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்போது வரை இந்தியாவில் 900-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

image

கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவில் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், மக்கள் நடமாட்டை கட்டுபடுத்த நாடு முழுவதும் காவல் துறையினர் இரவு பகல் பாராமல் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஜோகிந்தர் சர்மா ஹரியானா மாநில வீதிகளில் இறங்கி மக்கள் பணியாற்றி வருகிறார். இதனை கண்ட ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் ஜோகிந்தர் சர்மாவின் புகைப்படத்தை வெளியிட்டு பாராட்டியுள்ளது.

image

“கோலியை மிஞ்ச யாருமில்லை” ரவி சாஸ்திரி புகழாரம் ! 

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஐசிசி ” 2007 டி-20 உலகக்கோப்பை ஹீரோ , 2020: உண்மையான உலக ஹீரோ. கிரிக்கெட் வாழ்க்கைக்கு பிறகு இந்தியாவின் ஜோகிந்தர் சர்மா, ஒரு போலீஸ் அதிகாரியாக சிக்கலான நேரத்தில் தனது பங்களிப்பை அளித்து வருகிறார்” என தெரிவித்துள்ளது.

தனது பணி குறித்து பேசிய ஜோகிந்தர் சர்மா “நான் 2007 ஆம் ஆண்டு முதல் டிஎஸ்பியாக பணியாற்றி வருகிறேன்.நான் வாழ்க்கையில் பல சவால்களை சந்தித்து இருக்கிறேன். நாடு இப்போது இருக்கும் இக்கட்டான நிலையில் இருக்கிறது, இந்த சூழ்நிலைக்கு ஏற்ப பணியாற்றுவதும் சவாலானதுதான்” என தெரிவித்துள்ளார்.

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.