கொரோனா வைரஸின் கோரப் பிடி எதிர்பாராத கோணங்களில் எல்லாம் நீ்ண்டு செல்கிறது. கொரோனா பாதிப்புகளால் ஏற்படும் பொருளாதார பிரச்னைகளை எப்படி சமாளிப்பது என்ற அச்சத்தால் ஜெர்மனி நாட்டின் ஹெஸ் மாகாண நிதியமைச்சர் தாமஸ் ஷாஃபர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
54 வயதான ஷாஃபர் ரயில் தண்டவாளம் அருகே இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்படும் நெருக்கடிகளை சமாளிப்பது குறித்த மன அழுத்தத்தில் ஷாஃபர் இருந்ததாகவும் இதன் காரணமாகவே அவர் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என்றும் ஹெஸ் மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்தியாவசிய தேவைகள் கிடைக்கவில்லையா? போன் பண்ணுங்க.. – உதயநிதி ஸ்டாலின்
இம்மரணம் தனக்கு பேரதிர்ச்சி தருவதாக ஹெஸ் மாகாணத்தின் தலைமை அமைச்சர் வோல்கர் பாஃபர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்புகளை சமாளிக்க கடந்த 10 நாட்களாக இரவு, பகலாக ஷாஃபர் ஆலோசனைகள் நடத்தி வந்ததாக தலைமை அமைச்சர் கூறியுள்ளார்.
தகாத உறவுக்காகக் கணவரை விட்டுச் சென்ற மனைவி – கொரோனா பீதியில் திரும்பிய போது வெட்டிக் கொலை
ஹெஸ் மாகாணம் ஜெர்மனி நிதிச் சந்தையின் பிரதான பகுதியாக திகழ்வதும் அங்கு பல முக்கிய வங்கிகளின் தலைமையகங்கள் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸால் நேரடியாக ஏற்படும் உயிரிழப்புகள் தவிர மறைமுகமாக ஏற்படும் இது போன்ற உயிரிழப்புகள் உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM