`3000 அழைப்பிதழ்களை அடித்தோம். என்னுடைய திருமணத்தில் எம்.பி, எம்.எல்.ஏ-க்கள். 2 உயர் நீதிமன்ற நீதிபதிகள் கலந்து கொள்ள இருந்தனர். ஆனால், கொரோனா பாதிப்பால் 12 பேர் மட்டும் கலந்து கொண்டனர். சிம்பிளாக திருமணம் செய்து கொண்டேன்’ என்கிறார் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் உமேஷ்வரன்.

உமேஷ்வரன், திவ்யா திருமணம்

Also Read: ‘புத்தகங்கள் படியுங்கள்; சமூக வலைதங்களை ஒதுக்குங்கள்!’ – கரூர் இளைஞரின் நூதன விழிப்புணர்வு

கரூர் மாவட்டம், சித்தலவாய் பகுதியைச் சேர்ந்தவர் உமேஷ்வரன். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். இவருக்கும் சாமப்பட்டி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகள் திவ்யாவுக்கும் திருமணம் ஏற்பாடானது.

கரூர் புலியூர் பகுதியில் உள்ள பிரபல மண்டபத்தில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டு 3,000 பத்திரிகைகளும் அச்சடித்து வழங்கப்பட்டது. இந்தத் திருமணம் படுபிரமாண்டமாக நடைபெற இருந்தது. இந்தத் திருமணத்தில், திருநாவுக்கரசர், செல்வக்குமார், ஜோதிமணி என உள்பட எம்.பி-க்கள் கலந்துகொள்ள இருந்தார்கள். அதேபோல், செந்தில் பாலாஜி, குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் ராமர், கே.என்.நேரு உள்ளிட்ட எம்.எல்.ஏ-க்களும், இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகளும் கலந்துகொள்ள இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

உமேஷ்வரன், திவ்யா திருமணம்

இந்த நிலையில், சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் பாதிப்பு, உலக நாடுகளுக்குப் பரவியதோடு இந்தியாவையும் தாக்கியது. இதனால் இந்தியாவில் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதனால், பிரமாண்டமாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்ட சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் உமேஷ்வரனின் திருமணம், இரண்டு வீடுகளையும் சேர்த்து மொத்தம் 12 பேர் கலந்துகொள்ள சிம்பிளாக நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து, வழக்கறிஞர் உமேஷ்வரனிடம் பேசினோம். “வாழ்க்கையில் திருமணம் என்பது ஒவ்வொருவருக்கும் முக்கியமான கட்டம். அதைச் சிறப்பாக நடத்த வேண்டும் என்று எல்லோரும் ஆசைப்படுவாங்க. அதனால், என்னோட திருமணத்தையும் மிகச் சிறப்பாக நடத்த நினைத்தேன். முக்கிய அரசியல், நீதித்துறை ஆளுமைகளை அழைத்து, அவர்களின் ஆசியோடு எனது திருமணத்தை நடத்த நினைத்தேன். அறுசுவை சாப்பாடு, கரூரில் பிரபல திருமண மண்டபம்னு ஏற்பாடு பண்ணியிருந்தோம்.

ஆனால், உலகையே ஆட்டுவிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு, நம் நாட்டையும் ஆட்டுவிக்கிறது. இந்த நேரத்தில் கூட்டம் கூட்டுவது நல்லதல்ல. அதனால், எனது திருமணத்தை சிம்பிளாக நடத்த முடிவு செய்தோம். புக் செய்த மண்டபத்தை கேன்சல் செய்தோம். ‘யாரும் திருமணத்திற்கு வர வேண்டாம்’ என்று அத்தனை பேரிடமும் தகவல் தெரிவித்தோம்.

உமேஷ்வரன்

மற்ற ஏற்பாடுகளையும் கேன்சல் செய்தோம். திவ்யாவோட கிராமத்துல உள்ள பெருமாள் கோயில்ல சிம்பிளா, தக்க பாதுகாப்போடு குறுகிய நேரத்தில் என் திருமணத்தை நடத்தி முடிச்சுட்டோம். இரண்டு தரப்பிலும் சேர்த்து 12 பேர் மட்டுமே திருமணத்தில் கலந்துகிட்டோம். மாஸ்க் அணிந்துகொண்டு, மிக பாதுகாப்பாக திருமணத்தை நடத்தி முடித்தோம்.

நாம் ஒவ்வொருவரும் இந்தக் கொரோனா வைரஸை அரசு தெரிவிக்கும் உரிய முறைகளோடு இருந்து, நாட்டைவிட்டு ஒழிப்போம். கொரோனா பாதிப்பு தீரும்வரை நான் செய்ததுபோல் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்தும் ஒவ்வொருவரும் மிகவும் எளிமையாக நிகழ்ச்சிகளை, தக்க பாதுகாப்போடு நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.