இந்தியாவில் 21 நாள்களுக்கு லாக்-டவுண் அறிவிக்கப்பட்டதைப்போல, ஜனவரி மாதம் சீனாவில் லாக்-டவுண் அறிவிக்கப்பட்டு 30 நாள்களுக்கு மேல் நீடித்தது. பல ஆட்டோமொபைல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் சப்ளை இல்லாமல் பாதிக்கப்பட்டன.

ஆட்டோமொபைல் தொழிற்சாலை

சீனா இப்போது கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டதால், வுஹான் மாகாணத்தில் மீண்டும் தொழில்கள் தொடங்கப்பட்டுவிட்டன. பியூகாட் நிறுவனம், தனது சீன கூட்டு நிறுவனமான டோங்ஃபெங் உடன் சேர்ந்து, வுஹான் மாகாணத்தில் இருக்கும் தொழிற்சாலை உள்பட சீனாவில் இருக்கும் தனது மூன்று தொழிற்சாலைகளிலும் தயாரிப்பைத் தொடங்கிவிட்டது.

Also Read: `கொரோனாவால் பாதிப்படைந்த பிஎஸ்4 ரக வாகன விற்பனை!’ – கால அவகாசத்தை நீட்டிய உச்சநீதிமன்றம்

வால்வோ நிறுவனத்தின் 4 தொழிற்சாலைகளிலும்கூட வேலைகள் ஆரம்பித்துவிட்டன. ஃபோக்ஸ்வாகன் நிறுவனம்கூட தனது தொழிற்சாலையைத் திறந்துவிட்டது. ’தயாரிப்புகள் 100 சதவிகிதம் தொடங்கப்படவில்லை. ஆனால், சப்ளை நிறுத்தப்படக்கூடாது என்பதற்காகத் தொழிற்சாலைகளில் நாளொன்றுக்கு ஒரு ஷிஃப்ட் என்ற அடிப்படையில் உற்பத்தி தொடங்கிவிட்டது என்று ‘ப்ளூம்பெர்க்’ செய்தி நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

கார் தொழிற்சாலை

இது ஒரு பக்கம்… தற்போது சீனாவில் டொயோட்டாவின் தொழிற்சாலை முழு வீச்சில் இயங்கிவருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரே ஒரு தொழிற்சாலையில் மட்டும் இரண்டு ஷிஃப்ட்டுகள் நடைபெறுகின்றன. மற்ற தொழிற்சாலைகள் எல்லாம் முழு நேரமாக இயங்குகின்றன. ஒரு சில டீலர்களைத் தவிர, பெரும்பாலான டொயோட்டா டீலர்களின் ஷோரூம்களும் சீனாவில் திறக்கப்பட்டுவிட்டன.

சீனாவின் பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான SIAC மோட்டார்ஸ், தற்போது இருக்கும் டிமாண்டை சமாளிக்கும் அளவுக்கு உற்பத்திசெய்யும் முடிவில் தங்கள் நிறுவனங்களைத் திறந்துள்ளது. பிஎம்டபிள்யூ, டெய்ம்லர், ஃபோர்டு மற்றும் ஃபியட் கிரைஸ்லர் நிறுவனங்கள், தங்களது சேல்ஸ் மற்றும் சர்வீஸ் டீலர்ஷிப்களைத் திறந்துவிட்டார்கள். டெஸ்லாவின் ஹைடெக் தொழிற்சாலையும்கூட இப்போது முழுச் செயல்பாட்டுக்கு வந்துவிட்டது.

டெய்ம்லர் சென்னை தொழிற்சாலை

நவம்பரில் கொரோனா வந்தது. ஜனவரியில் எல்லாக் கடைகளுக்கும் பூட்டு போட்டார்கள். இரண்டு மாதத்தில் சீனா சகஜ நிலைக்குத் திரும்பிவிட்டது. ஒரு பெரிய போராட்டத்துக்குப் பிறகு, முன்பு இருந்த அதே வேகத்தில் வேலையைத் தொடங்கிவிட்டார்கள். இந்தியாவில் தொடங்கியிருக்கும் கொரோனா, இப்போது கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்துவருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைப்போல பெரிய அளவில் எந்த பாதிப்பையும் சந்திக்காதது நல்ல விஷயமே. நிறைய நிறுவனங்களும், சாதாரண மக்களும் முன் வந்து கொரோனாவை எதிர்த்துப் போராட உதவிவரும் இந்தச் சூழலைப் பார்க்கும்போது… இந்தியா, மே-ஜூன் மாதங்களிலேயே சகஜ நிலைக்குத் திரும்பிவிடும் என்ற நம்பிக்கை பிறக்கிறது என்கிறார்கள் தொழில்துறை சார்ந்தவர்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.