கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையும் ஆட்டம் காண வைத்திருக்கிறது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர உலக நாடுகள் தீவிரமாக முயற்சி மேற்கொண்டுவருகின்றன. இந்த நிலையில், வெளிநாடுகளிலிருந்து அரியலூர் மாவட்டத்திற்கு வந்த 32 பேர் தொடர் கண்காணிப்பில் இருப்பதோடு, ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பது, அரியலூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா

அரியலூர் சந்தைபேட்டை பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேருந்து ஓட்டுநருக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர். கோவையில் உள்ள தனியார் மில்லில் பணியாற்றிவந்த இவரின் மகள், கடந்த இரண்டு மாதங்களாக சென்னை வேளச்சேரியில் உள்ள வணிக வளாகத்தில் பணிபுரிந்துவந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில நாள்களாகத் தொண்டை வலி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதோடு, உடல் நிலை சரியில்லாமல் காணப்பட்ட அந்தப் பெண், சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து அவரின் குழந்தைகள், தந்தை, தாய், அண்ணன், தம்பி உள்ளிட்ட குடும்பத்தினர் 14 பேரையும் மருத்துவக் குழுவினர் அழைத்துச்சென்று பரிசோதனை செய்தனர்.

Also Read: `கவலையோ, மன அழுத்தமோ… வேண்டவே வேண்டாம்!’ – கொரோனா அச்சத்தைப் போக்கும் இலவச கவுன்சலிங் மையம்

அரியலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்துவருகின்றனர். இச்சம்பவம் அரியலூர் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் பெண் தங்கியிருந்த வீட்டை தாண்டிச்செல்லவே மக்கள் அச்சப்படும் நிலையில், அதிகாரிகள் அந்தத் தெருவில் கிருமிநாசினி அடித்து மக்களின் அச்சத்தைப் போக்கிவருகின்றனர்.

அரியலூர் மாவட்டத்திலிருந்து வேலை பார்ப்பதற்காக வெளிநாடுகளுக்குச் சென்று தற்போது சொந்த ஊர் திருப்பியுள்ள 278 பேரில், 32 பேரைச் சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தி வைத்திருக்கின்றனர் சுகாதாரத்துறை அதிகாரிகள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.