கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்காக புதிய செயலி ஒன்றை திருவள்ளூர் எஸ்பி வடிவமைத்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக இருப்பவர் அரவிந்தன். கம்ப்யூட்டர் இன்ஜினியரான இவர், தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால்
தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்காக புதிய செயலி ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இதற்கு கோ-பட்டி என பெயரிட்டுள்ளார். அதாவது தனிமைப்படுத்தப்பட்டவர்களின் நண்பன் என பொருள்.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதால், திருவள்ளூர் மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தனியாக வீட்டில் இருப்பதால் அவர்களை கண்காணிக்க காவல் துறையினரும், மருத்துவ துறையினரும் திணறி வருகின்றனர். இதனை தடுக்கும் விதமாக அரவிந்தன், இந்தச் செயலியை வடிவமைத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது “ முகத்தை வைத்து அடையாளம் கண்டு அவர்களை கண்காணிப்பதற்காக அந்தச் செயலியை கண்டுபிடித்தேன். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து அவரும் சூழ்நிலையில் அவர்களை கண்காணிப்பதும், அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதும் இயலாமல் போகின்றன. இதனால் பலர் வீடுகளை விட்டு சுதந்திரமாக வெளியில் சுற்றுகின்றனர். அதனை தடுக்கவே இந்தச் செயலியை கண்டுபிடித்தேன்.
கோ-பட்டி செயலியின் பயன்கள்:
கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் செல்போன்களில் இந்த செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் கோ-பட்டி(CoBUDDY) என்ற செயலியை தொட்டால் அவர்களின் முகம் செல்ஃபி எடுப்பது போன்று தோன்றும். பின்னர், அவர்களின் பெயர் உறுதி செய்யப்படும். அதன் பின்னர், தேவை என்ற ஒரு ஆஃப்ஷன் வரும். அதில் என்ன உதவி தேவையோ, உதாரணத்திற்கு இருமல் வருவதுபோல் உள்ளது என்றால் cough symptoms என type செய்தால், தனிமைப்படுத்தப்பட்டவரின் செல்போன் எண், கட்டுப்பாட்டு அறைக்கு சென்று விடும். இதனை காவல் துறையினரும், சுகாதார துறையினரும் ஒளித்திரையில் காண்பர்
கொரோனா உயிரிழப்பு : உலக அளவில் 30,000ஐ தாண்டியது
உடனடியாக அவர்களின் தேவை, அதாவது குறிப்பாக மளிகை பொருட்கள், மருத்துவரை அணுக வேண்டும் என்பது, அல்லது உளவியல் ஆலோசனைகள் தேவை உள்ளிட்ட உதவிகள் அடுத்த 10 நிமிடங்களில் கிடைக்கும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை பொது மக்களும், தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களும் பயன்படுத்தி கொள்ள மாவட்ட எஸ்பி
வேண்டுகோள் வைத்துள்ளார்.
முடங்கிய மக்கள்… உயர்ந்தது காற்றின் தரம்.. சாலைகளில் ஜாலியாக உலா வரும் விலங்குகள்..!
https://www.youtube.com/watch?v=XQ6CPim-QaI
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM