எதற்காக 21 நாட்கள் தனித்து இருக்க வேண்டும் என்பது குறித்து அமைச்சர் விஜய பாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவாமல் இருக்க பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் அமைச்சர் விஜய பாஸ்கர் அவரது ட்விட்டர் பக்கத்தில் சில விளக்கங்களை வீடியோ வடிவில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “144 தடை உத்தரவு நடைமுறையில் இருக்கும் இந்தத் தருணத்தில் ஒரு விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உலக அளவில் இந்தக் கொரோனா ஏற்படுத்திய பாதிப்பு, அதனால் மக்களுக்கு ஏற்பட்ட நிலை, அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடி இதை எல்லாம் நாம் அலசி பார்க்கும்போது, இந்த நோய் ஏற்படுத்தி இருக்கின்ற பாதிப்பு மிகமிக அதிகம் என்பது புரியும். அதாவது முதலில் ஒருவருக்கு இருந்த இந்த நோய்த் தொற்று அப்படியே ஒன்பது ஆகி, அவர்களிலிருந்து 999 என மாறி பின் அவர்களிலிருந்து ஒன்பது லட்சமாகி இன்றைக்கு 9 கோடியாக ஆகக் கூடிய நிலைக்கு மாறியுள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பான வதந்திகளை ...

உலக அளவில் பார்த்தால் சீனா, தென் கொரியா, இத்தாலி, ஈரான், அமெரிக்கா என அனைத்து நாடுகளை எடுத்துக் கொண்டு ஆராய்ந்தால் முதல் 15 நாட்கள், அடுத்த இரண்டாவது 15 நாட்கள், அதற்கடுத்து மூன்றாவது 15 நாட்களில் ஒன்று , இரண்டு, மூன்று எனப் பதிவாகி இருந்த கொரோனா பாதிப்பு நோயாளிகளின் எண்ணிக்கை அப்படியே 10வது 15 நாட்களில் பத்தாயிரமாகி உள்ளது. அதற்கு அடுத்து வந்த 15 நாட்களில் அப்படியே ஒரு லட்சமாக உயர்ந்திருக்கிறது. ஆகவேதான் அதைப்போல ஒரு காலகட்டம் நம் இந்தியாவிற்கோ தமிழ்நாட்டிற்கோ வந்துவிடக் கூடாது என்பதற்காக ஒட்டு மொத்தமாகத் தமிழகத்தில் ஊரடங்கைப் போட்டுள்ளோம். உடனே பிரதமரும் 21 நாட்கள் ஊரடங்கை நாடு முழுவதும் போட்டுள்ளார்” என்றவர் ஏன் இந்த 21 நாட்கள் தனிமைப்படுத்தல் என்பதற்கான விளக்கத்தையும் கூறியுள்ளார்.

 

 

“இந்தக் கொரோனா வைரசின் இங்குபேஷன் டேட் என்பது 14 நாட்கள். ஒருவருக்கு ஒரு நோய்த் தொற்று ஏற்பட்டால் அடுத்தவர் அதை அப்படியே ஏழு நாட்களில் அடுத்தவருக்குக் கடத்திவிடுவார். ஆக, 21 நாட்களும் நாம் யாருடைய தொடர்பிலும் இல்லாமல் இருந்துவிட்டாலே நிச்சயம் இந்த நோய்த் தொற்றைத் தடுத்துவிட முடியும். நமக்குக் கிடைத்துள்ள நோயாளிகளின் அறிக்கையை வைத்துப் பார்க்கும் போது முதலில் வெளிநாட்டிற்குப் பயணம் செய்தவருக்குப் பரவி அது அப்படியே அவருக்குப் பக்கத்திலிருந்தவருக்கு பரவி, அவர்கள் அப்படியே சுற்றத்தாருக்குப் பர வைக்கும் நிலைதான் நடந்துள்ளது. இதை எல்லாம் ஆய்வு செய்த பிறகுதான் நாம் தயவு செய்து தனிமையில் இருக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறோம்” என விளக்கியுள்ளார்.

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.