தேனி மாவட்டத்தில் உள்ள கரும்புத் தோட்டங்களில் வேலை செய்யும் கர்நாடகத் தொழிலாளர்கள், கரும்பை வெட்டி அதைத் தங்களது வண்டிகளில் ஏற்றி, கரும்பு ஆலைக்குக் கொண்டு செல்வார்கள்.

கர்நாடகத் தொழிலாளர்கள்

வேலையை வேகமாக முடிப்பது மட்டுமல்லாமல், கரும்பு ஆலை வரை ஒரே செலவு என்பதால், தேனி மாவட்ட விவசாயிகள் பெரும்பாலும், கர்நாடகத் தொழிலாளர்களிடமே வேலையை ஒப்படைக்கின்றனர்.

இவர்களும், குடும்பத்தோடு கரும்புத் தோட்டங்களில் வேலை செய்துவிட்டு, அங்கேயே தற்காலிக டெண்ட் அமைத்து தங்கிவிடுகின்றனர். சுழற்சி முறையில் ஒவ்வொரு ஊராகச் சென்று, கரும்புத் தோட்டங்களில் வேலை செய்து பிழைக்கும், இந்த நாடோடி மக்கள், ஊரடங்கு காரணமாகத் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தேனியில் முடங்கும் நிலை உருவாகியுள்ளது.

சாப்பாடு கொடுக்கும் தன்னார்வலர்கள்.

மொத்தம் 15 குடும்பம், போடி அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் உள்ள கரும்புத் தோட்டத்தில் முகாமிட்டுள்ளனர். குழந்தைகளோடு இருக்கும் இவர்களுக்கு உணவு, தண்ணீர் போன்ற எந்தவித அத்யாவசிய பொருள்களும் கிடைக்கவில்லை. இரண்டு நாள்களுக்கு மேலாகப் பட்டினியால் தவித்த இவர்களின் நிலை அறிந்த சில தன்னார்வலர்கள், நேற்று மதியம் அவர்களுக்கு உணவு கொடுத்திருக்கிறார்கள்.

Also Read: `18 பொருள்கள் இருக்கும் காய்கறிப் பை!’ – தேனி உழவர் சந்தை நிர்வாகத்தின் `ஸ்மார்ட் ஐடியா’

இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் மரியம் பல்லவி பல்தேவிடம் பேசியபோது,“நேற்று இரவுதான் இது தொடர்பாக எனக்குத் தகவல் கிடைத்தது. உடனே விசாரித்தேன். கரும்பு ஆலை நிர்வாகத்தினர்தான் இத்தொழிலாளார்களை ஒருங்கிணைக்கின்றனர். அவர்களிடம் பேசிவிட்டோம். இன்று இரவுக்குள், கரும்புத்தோட்டத்தில் இருக்கும் இவர்கள், ஒரு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டு, மூன்று வேளையும் சாப்பாடு கொடுக்க ஏற்பாடு செய்யப்படும்” என்று உறுதியளித்தார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.