தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் நாளை வீடு திரும்பவுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

image

திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அமைக்கப்பட்டுள்ள தனி வார்டில் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், திருச்சி மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ள 4 பேருக்கு கொரோனா அறிகுறிகள் இல்லை என தெரிவித்தார். தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சைக்காக தனி வார்டுகளை அமைக்க அறிவுறுத்தியுள்ளதாக கூறிய அவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நபரை வீட்டிற்கு அனுப்பவுள்ளதாக தெரிவித்தார்.

image

இதனிடையே கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பொதுவெளியில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்ற அறிவுறுத்தலை தமிழக சுகாதாரத்துறை வழங்கியுள்ளது. அதன்படி, இருக்கைகள், கதவுகளின் கைப்பிடிகள், பயணச்சீட்டு பெறும் கவுன்ட்டர்கள், திரையரங்கம், பேருந்து, ரயில், ஹோட்டல், திருமண மண்டபங்கள் ஆகியவற்றை அடிக்கடி கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா பாதிப்பு குறித்த உதவிகளுக்கு, 044 – 2951 0400, 2951 0500, 94443 40496, 87544 48477 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.