கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், காய்கறி பொருட்களை எப்படி கையாள வேண்டும் என மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் கடும் அச்சத்தை விதைத்திருத்திக்கிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டும் மக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகளான, கைகளை அடிக்கடி கழுவுதல், முகக் கவசம் அணிதல், வசிக்கும் இடத்தை தூய்மையாக வைத்தல் உள்ளிட்டவற்றை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதில் அத்தியாவசிய பொருட்களை எப்படி கையாள்வது போன்ற சந்தேகங்கள் மக்களிடம் நிலவி வருகிறது. ஆகவே இது தொடர்பாக மருத்துவர் புருஷோத்தமனை தொடர்பு கொண்டு பேசினோம்.‘

கோவை: மனநலம் பாதித்தவருக்கு முடி வெட்டி, புது ஆடை போட்டு உரிய இடத்தில் சேர்த்த போலீஸ்

அவர் கூறும்போது

1. அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகை பொருட்கள் மூலம் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஆகவே அதனை நன்றாக வேகவைப்பதன் மூலம் கொரோனா தொற்றை தவிர்க்கலாம்.

2. பருப்பு, மசாலா போன்ற பொருட்கள் இருக்கும் பாக்கெட்டுகளிலும் கொரோனா வைரஸ் இருக்க வாய்ப்பு இருப்பதால் அதனை கத்திரிக்கோல் பயன்படுத்தி மட்டுமே பிரிக்க வேண்டும்.

image

3. கடைகளில் இருந்து பொருட்களை வாங்கி வந்த துணிபைகள், பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்டவற்றை வீட்டின் வெளியே வைத்து விட வேண்டும். காலி பாக்கெட்டுகளை தனியாக பிரித்து குப்பையில் போடுவதும் அவசியம்.

image

4. பழங்களை உப்பு நீரில் கழுவி உண்ண வேண்டும். தோலுடன் உண்ணுவதை தவிர்க்க வேண்டும்.

image

5. குளியல் சோப்பு மூலம் கைகளை கழுவுவதை தவிர்த்து, சானிடைசர் மூலம் கைகளை கழுவுவது நல்லது. 

முக்கிய நகரங்களுக்கு விமானம் மூலம் செல்லவுள்ள மருந்துகள், ஆய்வு கருவிகள்!!

 

https://www.youtube.com/watch?v=qf1SI3YrYuk

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.