மருந்துப் பொருட்கள் முக்கிய நகரங்களுக்கு விமானம் மூலம் விரைவாக கொண்டு செல்லப்பட உள்ளன.
நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 1029 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 85 பேர் குணமடைந்துள்ள நிலையில் தற்போது 920 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 186 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கேரளாவில் 182 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே கொரோனா தொற்று பரவாமல் இருக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த 144 உத்தரவால் போக்குவரத்து சேவை முடங்கியுள்ள நிலையில் மருந்துப் பொருட்கள் முக்கிய நகரங்களுக்கு விமானம் மூலம் விரைவாக கொண்டு செல்லப்பட உள்ளன. இதற்காக வரும் 31ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 3ஆம் தேதி வரை ஏர் இந்தியா நிறுவனம் 9 சிறப்பு விமானங்களை இயக்க உள்ளது.
இவ்விமானங்கள் மூலம் கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள், பரிசோதனை கருவிகள் உள்ளிட்டவை நாடெங்கும் உள்ள முக்கிய நகரங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. இதில் இரு விமானங்கள் சென்னை – மும்பை, சென்னை – ஐதராபாத் இடையே இயக்கப்பட உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக பயணிகள் விமான போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
ஊரடங்கில் அவசரப் பயணமா ? காவல்துறையை தொடர்புக்கொள்ளலாம் !
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM