மதுரை மலர் சந்தை மூடப்பட்டதால், மல்லிகை பறிக்கப்படாமால் கருகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மதுரை என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது மல்லிகைதான். அங்கு சுமார் நாள் தோறும் ஆயிரம் ஏக்கரில் மல்லிகை சாகுபடி பயிரிடப்பட்டு, சராசரியாக 4 முதல் 5 டன் வரை உற்பத்தி செய்யப்படுகிறது. இவையனைத்தும் மதுரை மாட்டுதாவனி மலர் சந்தைக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. நாள்தோறும் சுமார் 10 முதல் 12 லட்சம் வரை வர்த்தகம் நடைபெறும் நிலையில் கொரோனோ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த ஒரு வாரமாக மலர் சந்தை மூடப்பட்டுள்ளது.
கொரோனா பரிசோதனையில் தவறான முடிவுகளை தரும் சீன கருவிகள் ?
இதனால் பூக்கள் விற்பனை முற்றிலும் இல்லாமல் பூக்களை பறிக்கும் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த ஒரு வாரமாக பூக்கள் பறிக்கப்படாமல் செடியிலேயே விட்டதால் செடியிலேயே பூக்கள் கருகி வருகிறது. ஆண்டில் 6 மாதம் மட்டுமே மல்லிகை பூ உற்பத்திக்கான சீசனாக இருப்பதால், தற்போதைய மல்லிகை பூவிற்கான சீசன் முற்றிலும் பாதிக்கப்பட்டு வருமானம் இழந்து தவித்து வருவதாக கூறும் விவசாயிகள் கூறுகின்றனர்.
இடைவெளி இல்லாமல் நடைபெறும் விஜய்யின் ‘மாஸ்டர்’ பட வேலைகள்
இது குறித்து விவசாயிகள் கூறும்போது நிலத்தடி நீர் குறைவால் வட்டிக்கு கடன் பெற்று விலை கொடுத்து தண்ணீர் வாங்கி விவசாயம் செய்து வருகிறோம். இந்த இழப்பை தங்களால் ஈடுகட்ட முடியவில்லை. ஆகவே அரசு கருணை கூர்ந்து மல்லிகை பூ விவசாயிகளுக்கு நிவாரண நிதியை வழங்கி, அத்தியாவசிய பொருள்கள் வாங்கிக்கொள்ளும் வகையிலாவது உதவ வேண்டும். இந்த மாதிரியான சூழ்நிலைகளில் இங்கு ஒரு நறுமண தொழிற்சாலை இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பதாலேயே பல ஆண்டுகளாக இங்கு ஒரு நறுமண தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தோம் என்று கூறினர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM