நாகையில் நாளை முதல் டிரைவிங் லைசென்ஸ் இல்லாதவர்களுக்கு பெட்ரோல் கிடையாது அம்மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸின் வீரியத்தை கண்டு உலக நாடுகளே அச்சத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், நாகை மாவட்டத்தில் இளைஞர்கள் சிலர் தெருவில் இரு சக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்ததாக தெரிகிறது. இதனை கேள்விப்பட்ட மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர், இனி வாகன ஓட்டுனர் உரிமம் இல்லாமல், பெட்ரோல் பங்குகளுக்கு வரும் இளைஞர்களுக்கு பெட்ரோல் வழங்கப்படமாட்டாது என தெரிவித்துள்ளார்.
‘எல்லோரும் அவரவர் மகன்களை அழைத்துவிட்டால்.’: 108 ஆம்புலன்ஸ் டிரைவரின் உருக்கமான ஆடியோ
எப்போது குறையும் கொரோனா வைரஸின் தாக்கம் ?
இது குறித்து அவர் கூறும்போது “இந்த நடவடிக்கை மூலம் கொரோனா வைரஸின் வீரியம் தெரியாமல் வீணாக சாலைகளில் சுற்றி திரியும் இளைஞர்கள் தடுக்கப்படுவார்கள். இந்த உத்தரவை நாகை மாவட்டத்தில் உள்ள 84 பெட்ரோல் நிலையங்களும் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளிலிருந்து வீட்டு மருத்துவக் கண்காணிப்பில் உள்ள நபர்கள், அரசின் உத்தரவை மீறி சாலைகளில் சுற்றித்திரிந்தால், அவர்களின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்படும்” என தெரிவித்துள்ளார்..
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM