மெக்சிகோவில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறியும் வகையில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 
 
Mexico City Metro marks 50th anniversary of public service | CGTN ...
 
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவைக் கட்டுப்படுத்த வல்லமை பொருந்திய நாடான அமெரிக்காவும் கடுமையாகப் போராடி வருகிறது. அங்கு 1500க்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டோர் உள்ள நாடாக அமெரிக்கா மாறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 345 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சுமார் 18 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
Mexico Confirms Its First Cases of Coronavirus
 
உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மெக்சிகோவில், இதுவரை 717 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மெக்சிகோ மெட்ரோ நிர்வாகம் ஒரு முன்னெடுப்பைச் செய்துள்ளது.
 
மெக்சிகோவில் உள்ள 195 மெட்ரோ ரயில் நிலையங்களில் நாளொன்றுக்கு 50 லட்சம் பேர் பயணிக்கின்றனர். அதில் கொரோனா தொற்றுள்ளவர்களைக் கண்டறிய மனித உடலில் உள்ள வெப்பத்தைக் கண்டறியும் வகையிலான கேமராக்களை பொருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் அதிக வெப்ப நிலை உடையவர்களைக் கண்டறிந்து, கொரொனா தொற்று பரவாமல் தடுக்க முடியும் என இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.