திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள தனது சொந்த கிராமத்தில் கொரோனா வைரஸை விரட்ட தூய்மை பணியில் நடிகர் விமல் ஈடுபட்டார்.
கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் தற்போது வரை 40 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அரசு, கொரோனா குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் கொரோனா பாதிப்பு சந்தேகம் உள்ள நபர்கள் அவர்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இது மட்டுமல்லாமல் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்பட பலரும் கொரோனா குறித்த விழிப்புணர்வு குறித்த கருத்துக்களை வீடியோ வாயிலாக சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா பாதிப்பால் நடிகர் விமலும் தனது சொந்த கிராமமான திருச்சி மாவட்டம் அருகே உள்ள பன்னாங்கொம்பு பகுதியில் தனது குடும்பத்துடன் தன்னை தனிமைப்படுத்தி வந்தார். இந்நிலையில் இன்று அவரது கிராமத்தில் கொரோனா பரவமால் இருக்க கிருமி நாசினி பணியானது நடைபெற்றது.
“மலர் சந்தை மூடப்பட்டதால் கருகி வரும் மல்லிகை” விவசாயிகள் வேதனை !
இடைவெளி இல்லாமல் நடைபெறும் விஜய்யின் ‘மாஸ்டர்’ பட வேலைகள்
இந்தப் பணியில் கிராமப்புற இளைஞர்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் செயல்பட்டனர். இந்நிலையில் நடிகர் விமலும் அவர்களுடன் தன்னை இணைத்துக்கொண்டு கிருமி நாசினி தெளிக்கும் பணியை செய்தார். விமல் தெரு தெருவாக சென்று கிருமி நாசினி தெளித்தது அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM