கும்பகோணத்தை சேர்ந்த 42 வயதான நபர், காட்பாடியை சேர்ந்த 49 வயதான நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40ஆக அதிகரித்துள்ளது
சீனாவில் இருந்து பரவத்தொடங்கிய கொரோனா இன்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலக அளவில் இதுவரை 597,607 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 133,377 பேர் குணமடைந்துள்ள நிலையில் 27,371 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 906ஆக உள்ளது. அதில் 83பேர் குணமடைந்துள்ள நிலையில் 804 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 38 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தனர். அதில் இப்போது வரை மதுரையைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
#UPDATE: TN has 2 new +ve cases. 42 Y M, Kumbakonam,return from West Indies at #TMCH Thanjavur.49 Y M, from Katpadi, return from UK at #Vellore Pvt Hosp. Both traveled from abroad transit via Middle East. Pts are in isolation & stable.@MoHFW_INDIA @CMOTamilNadu #TNHealth #CVB
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 28, 2020
இந்நிலையில் கும்பகோணத்தை சேர்ந்த 42 வயதான நபர், காட்பாடியை சேர்ந்த 49 வயதான நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40ஆக அதிகரித்துள்ளது
‘நான் தனிமைப்படுத்தப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மையில்லை’: கமல்ஹாசன்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM