Work from Home மூலம் பலரும் தங்களின் வீடுகளில் இருந்தே தற்போது பணிபுரிகின்றனர். இந்தச் சூழலில் மடிக்கணினிகளில் உள்ள கிருமிகளை எப்படி நீக்கம் செய்வது என தெரிந்துகொள்வோம்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலைப்பார்க்குமாறு அறிவுறுத்தியுள்ளன. இதனால் வொர்க் ஃப்ரம் ஹோமிற்கு மடிக்கணினிகள் மற்றும் கணினி அமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனினும் கிருமிகள் மின்னனு சாதனங்களில் ஒட்டிக்கொள்வது தவிர்க்க முடியாதது. அதனால் அந்த சாதனங்களை எப்படி கிருமி நீக்கம் செய்து தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது அவசியம் தெரிந்து வைத்திருக்கக்கூடிய ஒன்றாக உள்ளது.
கொரோனா எச்சரிக்கை : திருமணத்தை ஒத்திவைத்த ராய்ப்பூர் துணை ஆட்சியர்
குறிப்பாக, கிருமிநாசினி மற்றும் சுத்தம் செய்வது என்பது இரண்டு வெவ்வேறு விஷயங்கள். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி) கூற்றுப்படி, சுத்தம் செய்வது என்பது கிருமிகள், அழுக்கு மற்றும் அசுத்தங்களை மேற்பரப்புகளிலிருந்து அகற்றுவதை குறிக்கிறது. கிருமிநாசினி என்பது மேற்பரப்பில் கிருமிகளை “கொல்ல” ரசாயனங்களைப் பயன்படுத்துவதைக் குறிக்கிறது. மடிக்கணினி அல்லது பிற மின்னணு சாதனங்களை கிருமி நீக்கம் செய்ய, 30 சதவீதம் தண்ணீர் மற்றும் 70 சதவீதம் ஐசோபிரைல் ஆல்கஹால் கொண்ட தீர்வைப் பயன்படுத்த வேண்டும்.
முதலில், கையுறைகளை அணிந்து கொண்டு மின் கேபிளைத் துண்டிக்கவும். மடிக்கணியின் பேட்டரி நீக்கம் செய்யக்கூடியது என்றால் அதை வெளியே எடுக்கவும். பென் டிரைவ் அல்லது எஸ்டி கார்டு போன்ற வெளிப்புற சாதனங்களை அகற்ற மறக்க வேண்டாம். ஆல்கஹால் அடிப்படையிலான கிருமிநாசினியை ஒரு மைக்ரோ ஃபைபர் கைக்குட்டையை நனைத்து, திரையில் தொடங்கி அனைத்து வெளிப்புற மேற்பரப்புகளையும் கவனமாக சுத்தம் செய்ய வேண்டும்.
திருவாரூர்: தனிமைப்படுத்தப்பட்டோர் வெளியில் சுற்றியதாக 5 பேர் மீது வழக்குப்பதிவு
மெதுவாக அதே திசையில், மேலிருந்து கீழாக துடைத்து, யூ.எஸ்.பி மற்றும் கீபோர்ட்களில் தண்ணீரை சொட்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்த பிறகு, மடிக்கணினியை உலர விட வேண்டும். இப்போது மீண்டும் திரையை சுத்தம் செய்ய வேண்டும். அனைத்தும் முடிந்தவுடன் கையுறைகளை மூடிய குப்பைத் தொட்டியில் அப்புறப்படுத்திவிட்டு, கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM